Tuesday, January 13, 2015

B happy UR girl just filed 498A !! This one hired 4 guys to murder her man for refusing divorce

B happy UR girl just filed 498A !! This one hired 4 guys to murder her man for refusing divorce


Lots of men are upset with wives filing false dowry cases, false maintenance and domestic violence cases. Some have turned activists. Some cry and seek divine intervention. Many others like me have taken to the social media, to find other shoulders and cry.

I think we all need to take a break, have a re look at life and smile !! smile ?? did I say smile ? YES !! actually laugh aloud IF you can under the circumstances

Why laugh ?

Because your ablaa could have easily hired goons to get you killed

Here's an example


** LOYAL WIFE !!, her lover-boy and four goons arrested in Engineer Husband's murder attempt **


Ramya and Thangaraj from Coimbatore were married few year ago.Ramya had lost her parents and so her grand father and grand mother brought her up.Ramya's husband was attacked by unknown assailants. Initially the assailants approached him as if they were asking him for an address, but suddenly started cutting , stabbing him.Thankaraj screamed for help, some passers by cam for his help and the attacker fled.Thankaraj was badly hurt, lost a finger, but survived after the public admitted him to a nearby hospital

Ramya reached the hospital and wailed / cried a lot. She seemed shocked that someone should attack her husband

The police swung into action and started an inquiry. during the inquiry Initially Ramya claimed that she did not know anything about the incident

Later during inquiry it come to light that Ramya was in love with one Sameer even during her education days. Even after marriage, she could NOT forget Sameer. She continued her contacts with Sameer even AFTER marriage !!! She sought divorce from Thankaraj. The poor guy refused !!

Ramya plotted to eliminate Husband Thankaraj. So Sameer hired goons. Ramya sent her husband out on one day asking him to buy food from a specific restaurant. Sameer who was hiding in a desolate place en-route attacked Thankaraj. Luckily passers by helped Thankaraj !!

Following Ramya's interrogation police have nabbed Sameer and four others

Full news with due credits , below




  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி என்ஜினீயரை கொல்ல முயற்சி மனைவி உள்பட 4 பேர் கைது

 
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 13,2015, 2:38 AM IST





















கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி என்ஜினீயரை கொலை செய்ய முயற்சி நடந்தது.இதையொட்டி மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரிவாள் வெட்டு

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

கோவை பீளமேடு அண்ணா நகர் விகாஷ் லே–அவுட் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 30). இவர் கோவை ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரம்யா(19) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரம்யாவுக்கு பெற்றோர் கிடையாது. தாத்தா–பாட்டி தான் வளர்த்து திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த 10–ந் தேதி இரவு 9 மணியளவில் தங்கராஜ் தனது மோட்டார்சைக்கிளில் மனைவிக்கு டிபன் வாங்குவதற்காக ஜி.வி.ரெசிடென்சி நியூ ஸ்கீம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மறித்தனர். தங்கராஜிடம் முகவரி கேட்பது போல நடித்த அவர்கள் திடீரென்று தங்கராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள்.இதில் தங்கராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் கைவிரல் ஒன்று துண்டானது. பலத்த காயம் அடைந்த தங்கராஜ் 'காப்பாற்றுங்கள்' 'காப்பாற்றுங்கள்' என்று கூச்சல் போட்டார்.அந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் இதை பார்த்து விட்டு அங்கு ஓடி வந்தனர்.உடனே கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

போலீசார் தீவிர விசாரணை

ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த தங்கராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது பற்றி தகவல் கிடைத்ததும் தங்கராஜின் மனைவி ரம்யா ஆஸ்பத்திரிக்கு சென்று அழுது புரண்டார். கணவரை அநியாயமாக வெட்டிவிட்டார்களே என்று அழுது புலம்பினார்.

இந்த கொலை முயற்சி சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பிரவேஷ்குமார் மேற்பார்வையில் சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் தங்கராஜிடம் விசாரணை நடத்தியதில், அவர் தனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. எனவே என்னை கொல்ல முயன்றவர்கள் யார்? என்று தெரியாது என்று கூறினார். என்றாலும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ரம்யாவுக்கு கள்ளத் தொடர்பு இருந்த விஷயம் தெரியவந்தது.

கொலை முயற்சி அம்பலம்

இதைதொடர்ந்து போலீசார் ரம்யாவிடம் கேட்டபோது, முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று ரம்யா மறுத்தார். அவர் கூறிய தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. இதைதொடர்ந்து போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது.

இதை தொடர்ந்து போலீசார் 3 பேரை பிடித்தனர். அவர்கள் விவரம் வருமாறு:–

1. சமீர்(வயது 19, வீரகேரளம், 2.ரமேஷ்குமார்(24), முல்லை நகர், வடவள்ளி, 3.விஜயகுமார் என்ற முனியப்பன்(34) சீரநாயக்கன்பாளையம்.

இவர்களில் சமீருக்கும் ரம்யாவுக்கும் கல்லூரியில் படிக்கும்போதே காதல் இருந்து வந்துள்ளது. திருமணத்துக்கும் பின்னரும் அது தொடர்ந்தது.இதுபற்றி தெரியவந்ததும் கணவர் தங்கராஜ் மனைவியை கண்டித்துள்ளார்.ஆனால் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது. எனவே கணவர் உயிரோடு இருக்கும் வரை கள்ளக்காதலனோடு நிம்மதியாக வாழ முடியாது என்று உணர்ந்த ரம்யா கள்ளக்காதலன் சமீர் மூலம் கூலிப்படையினரை கொண்டு தங்கராஜை கொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் இதில் தங்கராஜ் காயங்களுடன் தப்பிவிட்டார்.

4 பேர் கைது

இதை தொடர்ந்து தங்கராஜின் மனைவி ரம்யா அவரது கள்ளக்காதலன் சமீர், கூலிப்படை தலைவன் விஜயகுமார், கூலிப்படையை சேர்ந்த ரமேஷ்குமார் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சமீருக்கு 19 வயது ஆகிறது என்பதால் அவரை பொள்ளாச்சியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ரம்யா கோவை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமீருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. அவர் பொங்கலுக்கு பின்னர் பணியில் சேர திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரையே மனைவி கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி நடந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிவாள் பறிமுதல்

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்கள், ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.கைது செய்யப்பட்டுள்ள விஜயகுமார் மற்றும் ரமேஷ்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

'விவாகரத்து கொடுக்காததால் கணவரை கொல்ல திட்டமிட்டேன்' என்று கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்
.

வாக்குமூலம்

கணவரை கொலை செய்ய முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ரம்யா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

எனக்கும் தங்கராஜுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் எனக்கு சிறிதும் விருப்பம் இலலை. எனது தாத்தா, பாட்டி வலுக்கட்டாயமாக என்னை தங்கராஜுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். நான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் படிக்கும்போது என்னுடன் படித்த சமீர் என்பவரை காதலித்தேன். அவரைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன், ஆனால் எனது ஆசை நிறைவேறவில்லை.

விவாகரத்து கொடுக்கவில்லை

நான் பாலிடெக்னிக் 2–ம் ஆண்டிலேயே படிப்பை நிறுத்தி விட்டேன். அதன்பிறகு எனக்கு திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின்னரும் என்னால் சமீரை மறக்க முடியவில்லை. என் கணவருடன் சேர்ந்து வாழ எனக்கு பிடிக்கவில்லை.இதனால் நான் அவரை விவாகரத்து செய்து விட்டு சமீருடன் வாழலாம் என்று திட்டமிட்டேன். இதற்காக என் கணவரிடம் விவாகரத்து கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சமீருக்கு தகவல் தெரிவிப்பேன்.அவரும் உடனே வீட்டுக்கு வந்து விடுவார்.நாங்கள் உல்லாசமாக இருப்போம். ஒருநாள் என் வீட்டுக்கு வந்த சமீரை கணவர் பார்த்து விட்டார்.இதை அவர் கண்டித்தார். அப்படியிருந்தும் எங்கள் கள்ளக்காதல் தொடர்ந்தது.

என் கணவர் இருக்கும் வரை சமீருடன் நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்த நான் கணவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.இதை சமீரிடம் கூறினேன்.அவரும் ஒப்புக் கொண்டார்.நாம் நேரடியாக தலையிட்டால் போலீசில் சிக்கிக் கொள்வோம். எனவே கூலிப்படையினரை கொண்டு அவரை கொலை செய்யலாம் என்று சமீர் கூறினார். இதற்காக விஜயகுமார் என்பவரிடம் பேரம் பேசினோம்.அதற்கு அவர் கொலை செய்வதற்கு ரூ.5 லட்சம் கேட்டார். ஆனால் கடைசியில் ரூ.2 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டு அதை விஜயகுமாரிடம் கொடுத்தோம்.அவர் ரமேஷ்குமார் என்பவரை கொலை செய்ய நியமித்தார்.

கொலை திட்டம் அரங்கேற்றம்

எங்கள் திட்டமிட்டபடி 10–ந் தேதி இரவு கொலை திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம். அன்று இரவு நானும் எனது கணவரும் வீட்டில் இருந்தோம்.அவர் வெளியே சென்றால் தான் கொலை திட்டத்தை அரங்கேற்ற முடியும் என்று நினைத்து எனக்கு இரவு டிபன் வாங்கி வாருங்கள் என்று கூறினேன். அதுவும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஜி.வி. ரெசிடென்சி ஸ்கீம் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று வாங்கி வாருங்கள் என்று கூறினேன்.

அவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார். உடனே நான் சமீருக்கு போன் செய்து என் கணவர் மோட்டார் சைக்கிளில் வெளியே வருகிறார் என்று தகவல் கூறினேன். அவர் ஓட்டலுக்கு சென்ற போது அவரை சமீரும், ரமேஷ்குமாரும் அரிவாளால் வெட்டினார்கள். ஆனால் அதில் அவர் தப்பி விட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்கு சென்று ஒன்றும் தெரியாதது போல அழுது புரண்டேன்.ஆனால் போலீசார் என்னிடம் தீவிர விசாரணை நடத்தியதில் நான் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

இவ்வாறு ரம்யா வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான ரம்யாவுக்கு 17 வயதில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் அவருக்கு தொடக்கத்திலிருந்தே விருப்பம் இல்லாமல் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.






*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment