'நான் இருக்கும்போது வேறொருவருடன் கள்ளத்தொடர்பா?' மாமியாரை கத்தியால் குத்திக்கொன்ற சென்னை வாலிபர் கைது | Daily Thanthi
வேலூர்
வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனையும், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் குண்டுமாரியம்மன் கோவில் வட்டத்தை சேர்ந்தவர் போகி. இவரது மனைவி லட்சுமி (வயது 40). இவர்களுக்கு சதீஷ்குமார் (16) என்ற மகனும், ஜீவிதா (20), சந்தியா (13) என்ற 2 மகள்களும் உள்ளனர். கடந்த 1–ந்தேதி லட்சுமி கட்டிட வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றார்.
அன்று இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை ஒரு தனியார் நிலத்தில் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லட்சுமி பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
தாய்–மகன் கைது
விசாரணையில், லட்சுமிக்கும், அவரது மருமகன் வெங்கடேசனுக்கும் (28) கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. மேலும் வெங்கடேசன் தலைமறைவாக இருந்ததால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வெங்கடேசனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் வெங்கடேசனையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் சின்ன பாப்பாவையும் கைது செய்தனர். கைதான வெங்கடேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:–
மாமியாருடன் தொடர்பு
நான் சென்னையில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறேன். எனக்கும், லட்சுமி மகள் ஜீவிதாவிற்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியை விட மாமியார் லட்சுமி அழகாக இருந்ததால் அவர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. நாளடைவில் எனக்கும், மாமியார் லட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.
10 நாட்களுக்கு முன்பு லட்சுமி செல்போனில் வேறு நபருடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். அதனை நான் தட்டிக்கேட்டேன். அப்போது அவர், என்னை தட்டி கேட்க உனக்கு அதிகாரம் கிடையாது, உன்னிடம் வருவதுபோல், நான் வேறு நபர் கூடவும் செல்வேன் என கூறினார்.
குத்தி கொலை
அதனால் வேறு நபருடன் பழக்கம் வைத்திருக்கும் அவரை கொலை செய்ய சென்னையில் இருந்தபடி திட்டம் தீட்டினேன். அதன்படி 1–ந்தேதி லட்சுமியிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி, ஒரு தனியார் நிலத்திற்கு அழைத்துச்சென்றேன். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்தோம். பின்னர் லட்சுமியின் கழுத்து உள்ளிட்ட 3 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினேன். அதில் லட்சுமி அங்கேயே சுருண்டு விழுந்து செத்தார்.
இதனால் நான் அங்கிருந்து எனது வீட்டிற்கு வந்து, நடந்ததை எனது தாயார் சின்ன பாப்பாவிடம் கூறினேன். தாயார் உதவியுடன் ரத்தக்கறை படிந்த எனது உடைகளை மறைத்தேன். ஆனாலும் போலீசார் பிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
--
No comments:
Post a Comment