Friday, February 8, 2013

Rape case kills an elderly mother !!



A single woman / mother brought up four of her sons with great difficulty selling fish on Chennai beach.

Now the mother is 58 years old her sons are approx 30, sons are married etc;

one son was charged with trying to mollest / rape a 1.5 year old kid in the area !!

Elderly Mother tried to save son, mediated, was asked 1 lakh ransom to avoid police complaint !!

fish selling mother (58) could manage Rs ten thousands with great difficulty, but could not muster more.

The complainants (from the 1.5 year old girl child's side) demanded more money.

When more money wasn't available they went ahead and filed police complaint.

The son (30+ years) was hunted by all women police;

this elderly mother couldn't take the pressure and so committed suicide !!! 

News in Tamil below


ஒன்றரை வயது குழந்தையிடம் சில்மிஷம்

மகன் செயலால் அவமானத்தில் தாய் தூக்கில் தொங்கினார்

கருத்துகள்

Whiskey Sour
MORE VIDEOS
சென்னை : மயிலாப்பூர் நொச்சி குப்பம் தற்காலிக குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவரது மனைவி கஸ்தூரி (58). இவர்களுக்கு குமரன் (32), சதீஸ் (31), ஆனந்தன் (29), ராஜ் (27) ஆகிய 4 மகன்கள் உள்ளனர். மகன்கள் சிறுவர்களாக இருக்கும்போதே சீனிவாசன் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு எண்ணூரில் குடியேறி விட்டார்.

மெரினாவில் மீன் வியாபாரம் செய்து மகன்களை காப்பாற்றினார் கஸ்தூரி. அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார். குமரனுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிறு மதியம் குமரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த வங்கியில் துப்புரவு பணி செய்து வரும் சுசீலா (30) என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை அங்கு தவழ்ந்து விளையாடிக் கொண்டு இருந்தது.

அந்த குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருந்த குமரன், குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சுசீலா தனது மகளை சிகிச்சைக்காக திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதற்கிடையில் குமரன் தலைமறைவானார். இதுகுறித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தர்மா, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குமரன் மீது வழக்குப் பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மகன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தால் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்த கஸ்தூரி தூக்கில் தொங்கினார். நேற்று காலை அக்கம் பக்கத்தினர் வந்து அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் கஸ்தூரி தற்கொலை செய்து கொண்டது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மகன் குமரன் மீது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் வந்தது. இதனால் பதறிப்போன கஸ்தூரி, சமாதானம் செய்வதற்காக சுசீலா வீட்டுக்கு சென்றார். அவர் தரப்பினர் போலீசில் புகார் அளிக்காமல் இருக்க யி1 லட்சம் தரும்படி மிரட்டியதாகவும், கஸ்தூரி ரூ.25 ஆயிரம் தருவதாக கூறி முதற்கட்டமாக யி10 ஆயிரம் கொடுத்தபோது அதை வாங்க மறுத்துவிட்டாகவும் கூறப்படுகிறது. பின்னர்தான் போலீசில் குமரன் மீது புகார் கொடுத்துள்ளனர்.

இதைதொடர்ந்து குமரன் தம்பிகள் ஆனந்தன், சதீஸ் ஆகியோர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். குமரன் வரும்வரை உங்களை விட மாட்டோம் என்று போலீசார் கூறிவிட்டனர். இதனால், கஸ்தூரி மேலும் விரக்தி அடைந்தார். அவமானம் தாங்க முடியாமல் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரனுக்கு அடி உதை: மகன் செய்த செயலால் அவமானம் தாங்க முடியாமல் இறந்த கஸ்தூரியின் உடல் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. மூத்த மகன் என்பதால் குமரன் இறுதி சடங்கு செய்ய சுடுகாட்டுக்கு வந்தார். இதை பார்த்த உறவினர்கள் உன்னால் தான் கஸ்தூரி இறந்துவிட்டார் என்று கூறி அவரை தடுத்தனர். மேலும் அங்கிருந்து குமரனை அடித்து விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூண்டிய பெண்ணிடம் விசாரணை

கஸ்தூரியின் கணவர் அதே பகுதியை சேர்ந்த மேகலா என்பவரின் 14 வயது உறவுக்கார பெண்ணை கடத்தி சென்று 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில், இருந்தே மேகலாவுக்கும், கஸ்தூரிக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்த முன் விரோதத்தை தீர்த்துக்கொள்ள மேகலா திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவரே பணப்பேரத்தை முன் நின்று நடத்தி அதில் ஏற்பட்ட தோல்வியால் கஸ்தூரி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர். எனவே, தற்கொலைக்கு தூண்டியதாக மேகலா மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=39518

No comments:

Post a Comment