Thursday, March 7, 2013

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, போலீஸ்கார காதலருடன் இணைந்து போட்டுத் தள்ளி விட்டார் மனைவி.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, போலீஸ்கார காதலருடன் இணைந்து போட்டுத் தள்ளி விட்டார் மனைவி.



''தீர்த்துக் கட்டினால்தான் நிம்மதியாக இருக்க முடியும்... விடு, நான் பார்த்துக்குறேன்''
 Posted by: Sudha 
Published: Wednesday, March 6, 2013, 12:38 [IST] 

 புதுச்சேரி: 

புதுவை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, போலீஸ்கார காதலருடன் இணைந்து போட்டுத் தள்ளி விட்டார் மனைவி. இருவரையும் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். 

புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் பேட்டை சேர்ந்தவர் மதியழகன் (34). இவரது மனைவி தேவி (26). இருவரும் காதலித்து மணம் புரிந்தவர்கள். 

இந்த நிலையில் தனது ஊருக்கு அருகே கழிஞ்சி குப்பம் என்ற இடத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் மதியழகன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையின்போது தேவி மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது கள்ளக்காதலரை ஏவி தேவி, கணவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். 

போலீஸாரிடம் தேவி கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்: 
நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நான் சூரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். எனது வீட்டில் இருந்து தினமும் பஸ் மூலம் சூரமங்கலத்துக்கு வந்து செல்வேன். 2 பஸ் மாறி சூரமங்கலத்திற்கு வந்து செல்ல வேண்டும். இது எனக்கு சிரமமாக இருந்தது. எனவே கரையாம்புத்தூரில் உள்ள பக்கத்து ஊருக்கு மாறுதல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று கருதினேன். இதுதொடர்பாக பல பிரமுகர்களை சந்தித்தேன். அப்போது வீராம்பட்டினத்தை சேர்ந்த ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சித்திரவேல் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தனக்கு தெரிந்த பிரமுகர் மூலம் மாற்றல் வாங்கி தருவதாக கூறினார். எனவே அடிக்கடி அவருடன் செல்போனில் பேசுவேன். நாளடைவில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் தனியாக சந்தித்து கொண்டோம். ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் சென்று சுற்றி வந்தோம். இந்த விஷயம் என் கணவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். ஆனாலும் நான் சித்திரவேலுடன் தொடர்பில் நீடித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நான் அங்கன்வாடிக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது என் கணவர் என்னை பின்தொடர்ந்து கண்காணித்தபடியே வந்தார். நெட்டப்பாக்கத்தில் வைத்து நான் போனில் பேசிக்கொண்டிருந்தேன். நான் காதலருடன் பேசுவதாக கருதி என்னை அங்கு வைத்து அடித்து உதைத்தார். இது எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது. இதுபற்றி சித்திரவேலிடம் கூறினேன். என் கணவரை தீர்த்து கட்டினால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். என் கணவரை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக போட்டோ ஒன்று கேட்டார். அதை கொடுத்தேன். 1-ந்தேதி சித்திரவேல் திட்டமிட்டபடி எங்கள் ஊருக்கு வந்தார். என்னிடம் கணவர் எங்கே என்று கேட்டார். அருகில் உள்ள சாராய கடைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தேன். உடனே சித்திரவேல் அங்கு தேடி சென்றார். என் கணவர் சாராயம் குடித்துவிட்டு திரும்பிப் கொண்டிருந்தார். அவரை நைசாக பேசி ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று அங்கு வைத்து சித்திரவேல் என் கணவரை கொலை செய்தார். பின்னர் எனக்கு போன் செய்து உன் கணவரை தீர்த்து கட்டிவிட்டேன் என்று கூறினார். மேலும், நான் வைத்துள்ள செல்போனை பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள சிம்கார்டை வீசிவிட்டு செல்போனையும் எங்கேயாவது மறைத்து வைத்துவிடு என்று தெரிவித்தார். எனவே அதன்படி செல்போனை வெளியே வீசிவிட்டேன். என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று கருதினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர் என்றார். தேவியைத் தொடர்ந்து சித்திரவேலுவையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/06/tamilnadu-woman-paramour-arrested-killing-man-171022.html

No comments:

Post a Comment