Is this deputy commissioners Wife spinning yarn to confuse the police ???
Who shot the police commissioner ??
======= news ==========
போலீஸ் அதிகாரி கொலையில் மனைவி தகவலால் குழப்பம்
-------------------------------------------------------------------------------
மும்பை:பயங்கரவாத தடுப்பு படையில் இருந்த, போலீஸ் துணை கமிஷனர், சஞ்சய் பானர்ஜி மர்ம மரணத்தில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தவறாக கையாண்ட போது, துப்பாக்கி வெடித்ததில், தன் கணவர் இறந்ததாக, பானர்ஜியின் மனைவி, சுஷ்மிதா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில, பயங்கரவாத தடுப்பு படையில், தானே நகரில், முன்னணி போலீஸ் அதிகாரியாக இருந்தவர், சஞ்சய் பானர்ஜி. இம்மாதம், 16ம் தேதி, தன் மனைவி மற்றும் மகனுடன், ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றார். அங்கு, தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், மர்மமாக இறந்தார்.உடனிருந்த மனைவி மற்றும் மகனிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது, மன அழுத்தம் காரணமாக, திடீரென துப்பாக்கியை எடுத்து சுட்டு, தற்கொலை செய்து கொண்டார் என, தெரிவித்தனர்.
எனினும், அதை போலீசார் நம்பவில்லை. மனைவி, சுஷ்மிதாவிடம் தொடர்ந்து விசாரித்து வந்தனர். நேற்று அவர் போலீசில் அளித்துள்ள தகவலில், "சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென கைக்குட்டையை எடுக்க முயன்ற போது, இடுப்பில் வைத்திருந்த கைத்துப்பாக்கி கீழே விழுந்து வெடித்தது. அதில், தலையில் குண்டு பாய்ந்து இறந்து விட்டார்' என, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தானே போலீஸ் கமிஷனர், கே.பி.ரகுவன்சி கூறும் போது, ""சுஷ்மிதாவின் தகவல் எங்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது. அதை நாங்கள் நம்பவில்லை. தொடர்ந்து விசாரிக்கிறோம்,'' என்றார்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=677695
No comments:
Post a Comment