Thursday, March 28, 2013
மாவட்ட நீதிபதியை அடித்து நொறுக்கியமனைவி மற்றும் உறவினர்கள் மீது வழக்கு
மாவட்ட நீதிபதியை அடித்து நொறுக்கியமனைவி மற்றும் உறவினர்கள் மீது வழக்கு
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013,22:42 IST
மாற்றம் செய்த நாள் : மார்ச் 26,2013,00:32 IST
ராய்ப்பூர்:சத்தீஸ்கரில், மாவட்ட நீதிபதி ஒருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால், கடுமையாக தாக்கப்பட்டார்.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மாவட்ட கோர்ட் நீதிபதியாக இருப்பவர், அவினாஷ் திரிபாதி, 33. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரியங்கா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு, ஆறு மாத குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன், அவினாஷ் மற்றும் பிரியங்கா இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம், தன் தாய் மற்றும் சகோதரியுடன், அவினாஷ் வீட்டிற்கு சென்ற பிரியங்கா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றவே, அவினாஷை, பிரியங்காவும், மற்றவர்களும் அடித்து உதைத்ததோடு, உருட்டுக்கட்டையாலும் தாக்கினர். பின், பிரியங்காவின் சகோதரரும், தந்தையும் தாக்கினர்.இவர்கள் அடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவினாஷை, அவர் நண்பரான மற்றொரு நீதிபதி, மொபைல் போனில் அழைத்தார். அந்த மொபைல் போன் அழைப்பை, பிரியங்கா துண்டித்ததும், சந்தேகமடைந்த, அவினாஷின் நண்பர், போலீசுடன் அங்கு சென்றார். அப்போது, பலத்த காயங்களுடன் ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்த அவினாஷ், மீட்கப்பட்டார்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அவினாஷ் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஒருவர், அவர் மனைவி மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source
http://www.dinamalar.com/news_detail.asp?id=674975
Subscribe to:
Post Comments (Atom)
A 33 year old district judge was attacked with sticks and grievously wounded by his beloved wife and her relatives at Raipur chattingargh
ReplyDeleteThe matter came to light when another judge a friend of the victim husband phoned this hapless husband and his wife ( attacked ) switched off the mobile phone
Police rushed to the spot and rescued the husband who was locked ...