Friday, September 14, 2012

வரதட்சணை புகார் கொடுத்த மனைவி: சேர்ந்து வாழச்சொன்ன போலீஸ் : உயிரோடு எரித்து கொன்ற கணவன்

"....இதுகுறித்து கடந்த மாதம் சத்யபிரியா திருச்சி கலெக்டரிடம் புகார் கூறினார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்க லால்குடி அனைத்து மகளிர் போலீசுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். லால்குடி மகளிர் போலீசார் சார்லசை அழைத்து விசாரித்தனர். சத்யபிரியாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் சார்லசை போலீசார் எச்சரித்து அனுப்பினர்......"

"...இதனால் ஆத்திரம் அடைந்த சார்லஸ், சத்யபிரியாவை தீர்த்துகட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது...."


=========== செய்தி ===========
 
வரதட்சணை புகார் கொடுத்த மனைவி: உயிரோடு எரித்து கொன்ற கணவன்
 
வரதட்சணை புகார் கொடுத்த மனைவி: உயிரோடு எரித்து கொன்ற கணவன்
திருச்சி, செப். 1-

திருச்சி மாவட்டம், கல்லக் குடி அருகே உள்ள புஞ்சை சங்கேந்தி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 30), கூலித்தொழிலாளி.

இவருக்கும், லால்குடி அருகே உள்ள சிறுதையூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் மகள் சத்யபிரியாவிற்கும் கடந்த 1 1/2 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் சத்ய பிரியா கடந்த 26-ந்தேதி திடீர் என மாயமானார். அக்கம் பக்கத்தினர் சார்லசிடம் கேட்டபோது அவர் சரியாக பதில் கூறவில்லை. இந்த தகவல் சத்யபிரியாவின் தந்தை ஸ்டீபனுக்கு தெரிய வந்தது. அவரும் புஞ்சை சங்கேந்தி விரைந்தார்.

மருமகன் சார்லசிடம் மகள் குறித்து கேட்டார். ஆனால் சார்லஸ் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியதோடு கல்லக்குடி போலீசில் தனது மனைவியை காணவில்லை என நேற்று முன்தினம் புகாரும் செய்தார்.

அதே நேரம் சத்யபிரியாவின் தந்தை ஸ்டீபனும் மகள் மாயமானதில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். இந்தநிலையில் புஞ்சை சங்கேந்தி நந்தியாறு வாய்க்கால் பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாகவும் அதில் இருந்து துர்நாற்றம் வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த மூட்டையை சப்-இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்த போது முக்கால்வாசி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலை பகுதி முழுவதும் எரிந்து மண்டை ஓடு மட்டும் இருந்தது. உடலில் எலும்பு கூட்டில் ஆங்காங்கே சதை ஓட்டியிருந்தது. அதில் சில சேலை துணியும் ஓட்டி யிருந்தது. எனவே அவர் இறந்து 4 நாட்களாகி இருக்கலாம் என கூறப்பட்டது. பிணத்தில் ஓட்டியிருந்த சேலை துணி இவற்றை வைத்து பார்த்த போது அது சத்யபிரியா உடல் என தெரியவந்தது.

சத்யபிரியாவை கொன்று எரித்து சாக்கு மூட்டையில் அடைத்து வீசியது யார்? என விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 26-ந்தேதி இரவு சத்யபிரியாவை கணவர் சார்லஸ் அழைத்துக் கொண்டு நந்தியாறு காட்டு பகுதிக்கு சென்றதாகவும அதன்பிறகு சார்லஸ் மட்டும் திரும்பி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறினர்.

சத்ய பிரியாவை பற்றி சார்லசிடம் கேட்டபோது சரியாக பதில் கூறவில்லை என்றும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சார்லசை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

அவரது தாய் சம்பூரணமும் 2 மாத குழந்தையுடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. சார்லஸ்-சத்யபிரியா தம்பதி திருமணம் நடந்தது முதல் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சார்லஸ், சத்யபிரியாவிடம் தனக்கு வரதட்சணையாக மோட்டார் சைக்கிள் மற்றும் நகை வாங்கி வருமாறு கேட்டு சித்ரவதை செய்துள்ளார். இதுகுறித்து கடந்த மாதம் சத்யபிரியா திருச்சி கலெக்டரிடம் புகார் கூறினார்.

அதன் மீது நடவடிக்கை எடுக்க லால்குடி அனைத்து மகளிர் போலீசுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். லால்குடி மகளிர் போலீசார் சார்லசை அழைத்து விசாரித்தனர். சத்யபிரியாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்றும் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்றும் சார்லசை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சார்லஸ், சத்யபிரியாவை தீர்த்துகட்ட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று (26-ந் தேதி) காட்டுக்குள் தேங்காய் பறித்து விட்டு வருவோம் என கூறி சத்யபிரியாவை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு கழுத்தை நெரித்து உள்ளார். மயக்கமான சத்யபிரியாவின் உடலில் மண் எண்ணை ஊற்றி எரித்து உள்ளார். உடலை சாக்கு மூட்டைக்குள் வைத்து நந்தியாறு வாய்க்காலில் வீசி உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சார்லசை கைது செய்ய போலீசார் தேடினர். இந்த தகவல் தெரியவந்ததும் திருச்சி கோர்ட்டு எண் (6ல்) நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் சார்லஸ் நேற்று மாலை சரண் அடைந்தான். நீதிபதி உத்தரவுப்படி அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே சார்லசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திங்கட்கிழமை கல்லக்குடி போலீசார் மனு செய்ய உள்ளனர். அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என கூறப்படுகிறது. 
மூலம் / source : 
http://www.maalaimalar.com/2012/09/01144049/Dowry-complaint-police-had-kil.html

========= இந்த செய்தியை ஒட்டிய வாசகர் கருத்து ===========

Tuesday, September 04,2012 10:13 AM, Ramesh said: 
சீ சீ இப்படி எல்லாம் அவனை தண்டிக்க கூடாது, அவனுடைய 20 விரல்களையும் வெட்ட வேண்டும், அதுவும் ஒவ்வொரு நாளைக்கு ஒரு விரல் என வெட்ட வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும்.

Monday, September 03,2012 06:20 PM, anitha said:
இப்படி இருக்கும்போது அனைத்துமகளிரும் வரதட்சணை கொடுமை என்று எப்படி கேஸ் போடா வருவார்கள் வந்தா உயிர்தான் போகும் ........
Saturday, September 01,2012 04:10 PM, ரெட் said:
இது போன்று கொலை செய்தவர்கள் கொடும்செயல் புரிபவர்களை அந்தமான் போன்ற தனிமை சிறை போன்ற ஒன்றை உருவாக்கி அதில் போடா வேண்டும் ஆயுள் வரை
On Saturday, September 01,2012 05:20 PM, chennaisiva said :
 
வேஸ்ட் of டைம் அண்ட் மணி. உடனே மின்சார நாற்காலியில் வைத்து அனுப்பிவிட வேண்டும்.

No comments:

Post a Comment