Thursday, September 20, 2012

பிப்ரவரி மாதம் திருமணமாகிய பெண் கொடுத்த புகாரில் கணவன் கைது !!! !! மாமியார் தலைமறைவு !! தாம்பத்தியம் சூப்பர் !!


# திருமணங்கள் செர்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன...ஆனால் அவை மகளிர் காவல் நிலயங்களில் போய் முடிகின்றன !!!!... 
# ஆகவே தேவையில்லாமல் குடும்ப விவகாரத்தில் , டவுரி வழக்குகளில், போலீஸ் தலையிடக் கூடாது,
# சமூக சேவகர்களை வைத்து சுமுகமான வழியில் மணப்பிணக்குகளுக்கு தீர்வு காண வேண்டும் ....
# வயோதிகர்களை, குறிப்பாக பெண்டிரை கைது செய்யக் கூடாது 
என்றெல்லாம் மேதகு நீதிபதி ரகுபதி அவர்களின் தீர்ப்பு வந்து சுமார் ஐந்தாண்டுகள் அகின்றன !!!


ஆனால் அதெல்லாம் ஏட்டில் மட்டும் தான் ... தமிழகத்தில், டவுரி வழக்குகளால் கணாவன்மார்களும் , மாமியாரும் நித்தம் நித்தம் கைதாகிக் கொண்டிருக்கின்றனர்... 98% டவுரி வழக்குகள் நிரூபணமாகாது, கணவனும் அவன் வீட்டாரும் பல வருடப் போராட்டம் போராட வேண்டியுள்ளது என்பது மற்றோர் கொடுமை !!!


பிப்ரவரி மாதம் திருமணமாகிய பெண் கொடுத்த புகாரில் கணவன் கைது !!! மாமியார் தலைமறைவு !! கொடுமை சம்பவமும் செய்தியும் கீழே !!!!


==========செய்தி ============
திருப்பூர் : 

திருப்பூரில், வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் கைது செய்யப்பட்டார். மாமியாரை போலீசார் தேடுகின்றனர்.

திருப்பூர், கருவம்பாளையம், துவக்கப்பள்ளி வீதியை சேர்ந்தவர் ஜெயப்பிரியா, 24. இவருக்கும், நல்லூர் பொன்முத்து நகரை சேர்ந்த சந்திர சேகர் மகன் சுரேஷூக்கும்,

கடந்த பிப்., மாதம் திருமணம் நடந்தது. அப்போது, 20 பவுன் நகை
மற்றும் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், 10 பவுன் நகை, ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி வருமாறு, ஜெயப்பிரியாவை சுரேஷ் மற்றும் அவரது தாயார் செல்வலட்சுமி ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் 28ம் தேதி, அவரை வீட்டை விட்டு விரட்டியுள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஜெயப்பிரியா அளித்த புகார் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சுரேஷை கைது செய்தனர். தலைமறைவான செல்வலட்சுமியை தேடி வருகின்றனர்.


மூலம் : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=549513


No comments:

Post a Comment