Thursday, September 20, 2012

உண்மையா ? பொய்கேசா ? கட்டியமனைவியை விட்டுச்சென்றாரா இந்திய தூதரக அதிகாரி ?? திடுக்கிடும் சம்பவம், போலீஸ்ல் , IFS officer மீது டவுரி கேஸ்

===== English Comments : =====
# Tamil News  :
# Dowry case on IFS officer and his family @ Chennai, India !
# IFS officer Allegedly left his newly wedded wife as wife's side could not pay additional 5.5 Lakhs dowry ....
# It is alleged that IFS officer ostensibly slammed car door and left mid day on marriage !!
# Could this be true ?????


-----------------------------------------------------------------------------

# உண்மையா ? பொய்கேசா ?
கட்டியமனைவியை விட்டுச்சென்றாரா இந்திய தூதரக அதிகாரி ??
திருக்கிடும் சம்பவம், போலீஸ்ல் , IFS officer மீதும் குடும்பத்தார் மீதும் டவுரி கேஸ் !!
========================================



ரூ.5.50 லட்சம் வரதட்சணை தராததால் தாலி கட்டிவிட்டு மணமகளை மண்டபத்தில் விட்டு சென்ற அதிகாரி


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: 
வரதட்சணை கேட்டு மணப்பெண்ணை மண்டபத்தில் விட்டு சென்ற ஐஎப்எஸ் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கி அதிகாரி. இவரது மகள் பவித்ரா (22) பிஎஸ்சி பட்டதாரி. இவருக்கு திருமண தகவல் மையம் மூலம் மாப்பிள்ளை தேடி வந்தனர். 
அப்போது, எழும்பூர் ரயில்வே குடியிருப்பில் வசிக்கும் ரயில்வே அதிகாரி செங்குட்டுவனின் மகன் ஐஎப்எஸ் அதிகாரியான கோவேந்தனுடன் திருமணம் நிச்சயமானது. 
கடந்த 18ம் தேதி மாலை கோடம்பாக்கம் எம்எல்எம் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை திருமணம் நடைபெற்றது. 
வரதட்சணையாக பெண்ணுக்கு 50 சவரன் நகை, மாப்பிள்ளைக்கு 5 சவரனில் நகை, ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்திருந்தனர். மண்டபத்தில் மதிய சாப்பாட்டை மாப்பிள்ளை வீட்டார் யாரும் சாப்பிடவில்லை. இது குறித்து பெண் வீட்டார் விசாரித்தபோது,  மேலும், ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும்  
 மாப்பிள்ளை போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரத்தில் வேலை பார்க்கிறார். அதனால் அங்கு விமானத்தில் செல்ல 1.50 லட்சம் பணம் என மொத்தம் ரூ.5.50 லட்சம் வரதட்சணை கொடுத்தால் சாப்பிடுவதாக கூறினர். இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் கோவேந்தன், மணப்பெண்ணை மண்டபத்தில் விட்டுவிட்டு காரில் ஏறி குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

இது குறித்து மணப்பெண்ணின் தந்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த எழும்பூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

மணப்பெண்ணின் தந்தை பன்னீர்செல்வம் கூறுகையில், “கூடுதல் வரதட்சணை தர மறுத்ததால் மாப்பிள்ளை கொடூரமாக நடந்து கொண்டார். காரின் கதவை வேகமாக அறைந்து சாத்தினார். நல்லநேரம் என் பெண் கையை எடுத்துவிட்டாள் இல்லை என்றால் விரல்கள் துண்டாகியிருக்கும். என் மகள் எப்படி வாழப்போகிறாள் என்று தெரியவில்லை. உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்ÕÕ என்றார்.


==மூலம் ==
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=33575

No comments:

Post a Comment