"....நேற்று இரவு மாப்பிள்ளை ஊரான ஈஸ்வரகண்ட நல்லூரில் பெண் அழைப்பு நடந்தது. அங்கு குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்த செந்தாமரை திடீரென 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என கூறிவிட்டார்...."
"....இதனால் திடுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை சமாதானப்படுத்தினர். பின்னர் மாப்பிள்ளை – பெண் வீட்டார் திருவதிகையில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். ...."
"...மணப்பெண் செந்தாமரையிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மாப்பிள்ளை வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்பதாக அவர் குற்றம் சாட்டினார். மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, மணப்பெண் ஏதோவொரு உள்நோக்கத்துடன் திருமணத்துக்கு மறுத்து அடம் பிடிப்பதாக கூறினர். இரு தரப்பினரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்....."
****************
பண்ருட்டி, ஜுன் 2–
பண்ருட்டியை அடுத்த மந்திப்பாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் செந்தாமரை (வயது 22). வங்கி பெண் ஊழியர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த ஈஸ்வரகண்ட நல்லூரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (30). சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
ராஜீவ்காந்திக்கும், செந்தாமரைக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. பண்ருட்டியை அடுத்த திருவதிகையில் உள்ள கல்யாண மண்டபத்தில் இன்று திருமணம் நடத்த தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன.
நேற்று இரவு மாப்பிள்ளை ஊரான ஈஸ்வரகண்ட நல்லூரில் பெண் அழைப்பு நடந்தது. அங்கு குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்த செந்தாமரை திடீரென 'மாப்பிள்ளை பிடிக்கவில்லை' என கூறிவிட்டார்.
இதனால் திடுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணை சமாதானப்படுத்தினர். பின்னர் மாப்பிள்ளை – பெண் வீட்டார் திருவதிகையில் உள்ள கல்யாண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். எனினும் மாப்பிள்ளை மற்றும் அவரது தரப்பினர் மீது மணப்பெண் அடுத்தடுத்து புகார் கூறி முரண்டு பிடித்தார்.
இதனால் மாப்பிள்ளை தரப்பினரும் வெகுண்டெழ வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி, மாறி குற்றச்சாட்டு கூறியதால் கூச்சல்–குழப்பம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று காலையில் நடைபெற இருந்த திருமணம் தடைபட்டு நின்றுவிட்டது.
இருதரப்பினரும் பண்ருட்டி போலீஸ் நிலையம் சென்று முறையிட்டனர். அதனை கேட்டறிந்த போலீசார் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மணப்பெண் செந்தாமரையிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மாப்பிள்ளை வீட்டார் கூடுதல் வரதட்சணை கேட்பதாக அவர் குற்றம் சாட்டினார். மாப்பிள்ளை குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, மணப்பெண் ஏதோவொரு உள்நோக்கத்துடன் திருமணத்துக்கு மறுத்து அடம் பிடிப்பதாக கூறினர். இரு தரப்பினரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே ராஜீவ் காந்தி–செந்தாமரை திருமணம் திடீரென நின்று விட்டதால் மாப்பிள்ளை– மணப்பெண்ணின் உறவினர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர். எனவே கல்யாண மண்டபம் களை இழந்தது.
http: // www . maalaimalar . com /2014 /06/02123330/bride-stopped-marriage-near-Pa.html
No comments:
Post a Comment