Woman murders legal hubby & marries off 16yr old daughter to ILLICIT LOVER !!
Amutha (aged 40) was legally married tto one Ramadas. They have two children out of wedlock. Some years ago, Amutha developed illicit love with one Sankar. Since Ramdass (legal hubby) was an obstacle the duo are supposed to have joined together and murdered legal hubby Ramdass. they were jailed and later released. After getting released Sankar (lover boy) married one Mahalakshmi (aged 23). Mahalakshmi is pregnant now.
However Loverboy Sankar had an eye on the innocent 16 year old legal daughter of Amutha. So amutha married off the innocent kid to this already married guy
Finally the loverboy's first wife found this out and raised a hue and cry. Amutha and others seemed to have attacked her, so she reached police and matter has come to light
முதல் மனைவிக்கு தெரியாமல் கள்ளக்காதலனுக்கு, 16 வயது மகளை திருமணம் செய்து வைத்த தாய் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அம்பத்தூர், ஜூன்.5-முதல் மனைவிக்கு தெரியாமல், தனது 16 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த தாயும் மற்றும் அவரது மகனும், கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.கள்ளக்காதல் சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா (வயது 40). இவர், கோயம்பேட்டில் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவருக்கு பிரபு (20) என்ற மகனும், சாந்தி (16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகளும் உள்ளனர். அமுதா, தனது கணவர் ராமதாஸ் மற்றும் குடும்பத்துடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிமலையில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் சாலையோரத்தில் அமுதாவும், சங்கர் (30) என்பவரும் அடுத்தடுத்து தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வந்தனர். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கணவன் கொலை மனைவியின் கள்ளக்காதலை அறிந்த ராமதாஸ், 2 பேரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்கள் இருவரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்தனர். கடந்த 2008-ம் ஆண்டு அமுதா-சங்கர் இருவரும் சேர்ந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி ராமதாசை கொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் கைதாகி பின்னர் வெளியில் வந்த அமுதா, சங்கர் இருவரும் தனித்தனியே கோயம்பேட்டில் மீண்டும் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருகின்றனர். 2-வது திருமணம் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (23) என்ற பெண்ணை சங்கர் திருமணம் செய்து கொண்டார். தற்போது மகாலட்சுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது கள்ளக்காதலி அமுதாவின் மகளான 16 வயது சிறுமி சாந்தியை சங்கர் 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அமுதாவே இந்த திருமணத்தை செய்து வைத்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் தனது கணவர் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக 2-வது திருமணம் செய்து கொண்ட விவகாரம் அறிந்த மகாலட்சுமி, அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், அமுதாவின் வீட்டுக்கு சென்று, "முதல் மனைவி இருக்கும்போது எப்படி நீ உங்கள் மகளை எனது கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைக்க சம்மதிக்கலாம்?" என்று நியாயம் கேட்டார். அப்போது அமுதா, அவரது மகன் பிரபு ஆகியோர் மகாலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி புகார் செய்தார். 3 பேர் கைது அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், முதல் மனைவி இருக்கும் போதே அவருக்கு தெரியாமல் 2-வதாக 'மைனர்' பெண்ணை திருமணம் செய்ததாக சங்கர் மற்றும் நியாயம் கேட்ட மகாலட்சுமியை தாக்கியதாக சிறுமியின் தாயார் அமுதா, அவருடைய மகன் பிரபு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.பின்னர், கைதான 3 பேரையும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். |
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment