Friday, June 20, 2014

Men BEWARE!: Chennai husband arrested having wife's "improper" photos / video on cellphone !!

dhraviyam (33) and his wife veNi ( 28) were married for 8 years. Veni has left her husband 1 year ago due to some differences. It is alleged that Dhravyam requested Veni to return back and also have conjugal relations with him. It is further alleged that Dhravyam had photos of Veni Taking bath etc in his mobile phone and threatened Veni with those photos !! Veni complained to police who have arrested Dhravyam

*****************************


செல்போனில் ஆபாச படம் எடுத்து மனைவியை மிரட்டிய கணவர் கைது


சனி, ஜூன் 21,2014, 10:20 AM IST

பதிவு செய்த நாள்: சனி, ஜூன் 21,2014, 10:20 AM IST



சென்னை,

செல்போன் தொடர்பான குற்றங்கள் உலகம் முழுவதும் அதிகமாக நடக்கின்றன.இவைகளில் முதலிடத்தில் இருப்பது ஆபாசப் படங்கள், வீடியோக்கள் தான்.அதிர்ச்சியூட்டும் அதிர்ச்சியூட்டும் இத்தகைய கேமிரா செல்போன்கள் மூலம் படம் எடுப்பதால்  ஆயிரக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையை நாள் தோறும் சீரழிக்கிறது.

உடன் பணிபுரிபவர்களையோ, மாணவியையோ, தோழியையோ ஆபாசமாய் படம் எடுத்து அதை மற்றவர்களுக்குக் காண்பிக்கப் போவதாய் செய்யப்படும் "பிளாக் மெயில்" பல ஆயிரம் பெண்களுடைய கற்பையும், நிம்மதியையும், வாழ்க்கையையும் கலைத்து எறிந்திருக்கிறது. இது இப்போது குடும்பத்திற்குள்ளும் ஊடுருவி உள்ளது.

கேமிரா செல்போன்கள் உங்கள் வீட்டில் குழந்தைகளோ,  வயது சிறுமிகளோ இருந்தால் மிகவும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர்களானாலும், நண்பர்களானாலும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தை மட்டுமே வழங்குங்கள். கேமரா விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்காதீர்கள்.எந்தக் காரணம் கொண்டும் விளையாட்டாக உங்கள் உடல் "அழகை" நீங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் மொபைலில் இருந்து அவை இன்னோர் மொபைலுக்கு திருடப்பட்டு விடலாம்

இதோ கேமிரா செல்போனால் சிதைந்து போன குடும்பம் கணவனே மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி உள்ளான்.

சென்னையை சேர்ந்தவர் திரவியம் (33). இவரது மனைவி வேணி (28) (பெயர் மாற்றப்பட்டுள் ளது). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

திரவியத்துக்கு ஒரு வினோதமான ஆசை உண்டு. மனைவி குளிப்ப ரகசியமாக படம் பிடிப்பார். அவர் ஆடை மாற்றுவதையும் விட்டு வைப்பாதில்லை. மனைவியோடு உல்லாசமாக இருப்பாதையும் காமிராவில் பாதிவு செய்து ரசிப்பார். கணவரின் வினோத ஆசையை சகித்து கொண்ட வேணி ஒரு கட்டத்தில் கணவனின் 'செக்ஸ்' தொல்லை தாங்க முடியாமல் பிரிந்து சென்று விட்டார். கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த நிலையில் திரவியம் மனைவியை சந்தித்து தன்னோடு உடல் உறவுக்கு வரும்பாடி அழைத்தார். அதற்கு மறுத்த வேணி உன்னோடு சேர்ந்து வாழ மாட்டேன் என்று கூறினார்.  அதை கேட்டு ஆவேசம் அடைந்த திரவியம் என் ஆசைக்கு இணங்காவிட்டால் உன் அந்தரங்க காட்சிகளை இணைய தளங்களில் பாரப்பி விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி கணவர் மீது போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திரவியத்தை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் வேணியின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் இடம் பெற்று இருந்தது. மேலும் 2 பெண்களின் ஆபாச பாடங்களும் அந்த போனில் இருந்தது. அவர்கள் யார்? அவர்களையும் திரவியம் மிரட்டினாரா? என்பாது பாற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


source
http://www.dailythanthi.com/News/Districts/2014/06/21102058/Cell-phone-X-pictures-Threatened-to-arrest-her-husband.vpf

No comments:

Post a Comment