Thiruporur, Tamil Nadu, Jun 5th
Selvam a poor labourer from Villupuram , Vaanur was married to Meena. He was doing agricultural work along with his wife. His wife Meena had developed illicit relations with a Troika who came from Bangalore ... On the fateful day (June 01st) Selvam had drinks and fell asleep in his hut. Noticing that he was asleep, Meena left their hut and started having fun with her Illicit lovers, through the night. After midnight Selvam woke up and notice his wife missing. He went searching for her and found her having fun with her loverboys. When he tried to question her all the four attacked him and he died on the spot. Initially ablaa naari wife tried to hide it, saying her husband fell down from a tree, but the post mortem proved that Selvam was murdered. Finally Meena accepted the truth on questioning and the others are also arrested3 கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவன் அடித்துக்கொலை
மனைவி கைது; கள்ளக்காதலர்களும் சிக்கினர்
திருப்போரூர், ஜூன்.5-3 கள்ளக்காதலர்களுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவனை அடித்துக்கொலை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கூலி வேலை
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்துள்ள லவுத்தகுப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 40). இவருடைய மனைவி மீனா(30). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கணவன்-மனைவி இருவரும் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு கிராமத்தில் தங்கி விவசாயம் மற்றும் மரம் வெட்டுதல் உள்ளிட்ட கூலி வேலைகள் செய்து வந்தனர்
சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(25), மதுராந்தகத்தை அடுத்த ஆனந்தமங்கலம் பகுதியை சேர்ந்த நாகேஷ்(45), வடமணிபாக்கத்தை சேர்ந்த ராஜி(20) ஆகியோரும் அதே பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.
மர்மச்சாவு
மீனாவின் நடத்தையில் அவருடைய கணவர் செல்வத்துக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 1-ந்தேதி இரவு வழக்கம்போல் மீனாவுக்கும், செல்வத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அன்று இரவு செல்வம் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தார்¢.இது குறித்து திருப்போரூர் போலீசில் மீனா புகார் கொடுத்தார். அதில், குடிபோதையில் மரத்தில் ஏறிய எனது கணவர் செல்வம் தவறி கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறி இருந்தார். போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல்
பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வத்துக்கு உள்காயம் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்வத்தின் உடலை பெற வந்த மீனாவிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து கணவரை அடித்துக்கொன்றதாக திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.மீனாவுக்கும், அதே பகுதியில் தங்கி வேலை செய்து வரும் ராஜேந்திரன், நாகேஷ், ராஜி ஆகியோர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, மீனா, கணவர் செல்வத்துடன் சேர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறியதும், செல்வம் தூங்கி விட்டார்.
3 பேருடன் உல்லாசம்
மீனா வெளியே சென்று அதே பகுதியில் உள்ள ஒரு குடிசையில் ராஜேந்திரன், நாகேஷ், ராஜி ஆகிய 3 பேருடன் உல்லாசமாக இருந்தார். நள்ளிரவு 1 மணியளவில் செல்வத்துக்கு போதை தெளிந்தது. விழித்து பார்த்த அவர், மனைவியை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் சென்று மனைவியை தேடினார்.அப்போது, குடிசையில் 3 பேருடன் தனது மனைவி மீனா உல்லாசமாக இருப்பதை பார்த்து விட்டார். ஆத்திரம் அடைந்த அவர், மீனாவை சரமாரியாக அடித்து உதைத்தார். மீனாவுக்கு ஆதரவாக அவருடைய கள்ளக்காதலர்கள் 3 பேரும் செல்வத்தை அடித்து உதைத்தனர்.
4 பேர் கைது
மனைவி உள்பட 4 பேரும் சேர்ந்து தாக்கியதால் தலையில் பலத்த காயமடைந்த செல்வம், மயங்கி விழுந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் பயந்துபோன மீனா, போதையில் மரத்தில் ஏறியபோது செல்வம் கீழே விழுந்து இறந்து விட்டதாக போலீசாரிடம் பொய் புகார் கூறியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துகுமார் வழக்கு பதிவு செய்து மீனா மற்றும் அவருடைய கள்ளக்காதலர்களான ராஜேந்திரன், நாகேஷ், ராஜி ஆகிய 4 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் அனைவரும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்
http://epaper.dailythanthi.com
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment