****************
இவள் வேற மாதிரி!
'9-ம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவியைக் காணவில்லை' என்று அந்தப் பள்ளி நிர்வாகமே புகார் கொடுக்க... செல்போன் டவர் கொண்டு ஆராய்ச்சியில் இறங்கியது போலீஸ். திருப்பூர், கோவை ஏரியாக்களில் இருப்பதாக டவர் காட்டிக்கொடுக்க... அந்தப் பெண்ணையும் அவருடன் இருந்த நபரையும் போலீஸார் தூக்கிக்கொண்டு வந்தனர். விசாரணையில்தான், அந்தப் பெண்ணோடு இருந்தது அவரது ஆசிரியர் என்று தெரிய வந்தது.
அவரை நையப் புடைத்து விசாரித்தபோது, ''அந்த மாணவிதான் என்னை மிரட்டி செக்ஸ் வைத்துக்கொள்கிறார். அவர் அழைக்கும்போது போகவில்லை என்றால், போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டுகிறார்'' என்று பரிதாபமாகச் சொல்ல... ஆடிப்போய்விட்டனர் போலீஸார். இதுபற்றி விசாரணையில் இறங்க... அந்தப் பெண் செல்போன் மூலம் 30-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் பேசிவருவது தெரிய வந்துள்ளது. இவருக்கும் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்துள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவங்களை எல்லாம் உற்று கவனிக்கும் சமூக ஆர்வலர்களோ, ''குழந்தை வளர்ப்பில் குறைபாடு உள்ளதுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். என்ன செய்கிறோம் என்று தெரியாத இரண்டாங்கெட்ட வயசு பதின்ம வயது. அப்போது பெற்றோர் கண்காணிப்பில் குழந்தைகள் இல்லாவிட்டால், இதுபோன்று வழிதவறி போய்விட வாய்ப்பு உள்ளது. படிக்கும்போது பல வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும்போது, நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். இப்போது நடைபெற்ற அனைத்து சம்பவங்களின் பின்னணியிலும் செல்போன் இருப்பதைப் பார்த்தாலே இது புரியும்'' என்கிறார்கள்.
பாசத்தோடு கண்டிப்பும் தேவை!
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=96203#.U6qJjxDAszs.facebook
No comments:
Post a Comment