When questioned about marks on Kanakaraj(husband's) body, Amalabhai said due to heart attack her husband climbed up and committed suicide by hanging !! Police have arrested the duo and sent the body for post mortem !!
கருங்கல், ஜூன் 6–
புதுக்கடை அருகே உள்ள வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் கனகராஜ் கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கனகராஜ் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறிய அவரது மனைவி அமலாபாய் உடல் அடக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார்.
கனகராஜின் குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்று உடலை பார்த்த போது கழுத்தில் காயங்கள் இருப்பதை கண்டனர். இதுசந்தேகத்தை ஏற்படுத்தவே போலீசில் புகார் செய்தனர்.
புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அமலாபாய்க்கும், அதே பகுதியை சேர்ந்த விஜூ என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாகவும், இது தொடர்பான தகராறில் தான் கனகராஜ் இறந்திருக்கலாம் என்று உறவினர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த போலீசார் கனகராஜ் உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அமலாபாயையும், விஜூவையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இருவரின் செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்ததோடு, அவர்களின் செல்போன் அழைப்புகளை பட்டியல் எடுத்து விசாரித்தனர். இதில் கடந்த 5 ஆண்டுகளாக அமலா பாய்க்கும், விஜூவுக்கும் பழக்கம் இருந்து வந்ததும், தொடர்ச்சியாக பல மணி நேரம் இருவரும் செல்போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கனகராஜ் வெளிநாட்டில் வேலைக்கு சென்றதால் அமலா பாய், விஜுவுடன் கள்ளக்காதலில் திளைத்து வந்தார். கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு கனகராஜ் ஊர் திரும்பிய பின்னரும் கள்ளக் காதலனுடன் செல்போனில் பேசுவதை அமலா பாயால் நிறுத்த முடியவில்லை.
இதை அறிந்த கனகராஜ் மனைவியை கண்டித்தார். இதை அமலா பாய் தனது கள்ளக்காதலன் விஜூவுடன் கூறி கண்ணீர் வடித்தார். ஆவேசமடைந்த அவர் கனகராஜூடன் தகராறில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கனக ராஜ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கனகராஜ் தூக்கில் தொங்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அமலா பாய் தனது கணவர் மாரடைப்பால் இறந்ததாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் மன உளைச்சலால் தூக்கில் தொங்கியதாகவும், நான் தான் கயிற்றை அவிழ்த்து உடலை கீழே இறக்கியதாகவும் கூறி நாடகமாடினார். இதையும் போலீசாரால் நம்ப முடிய வில்லை.
தனி ஒரு பெண்ணால் பிணத்தை எப்படி கீழே இறக்க முடியும்? என்ற சந்தேகம் நிலவுகிறது. அமலாபாயும், விஜுவும் சேர்ந்து கனகராஜை அடித்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் கனகராஜ் அடித்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது தெரிய வரும்.
எனினும் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தான் கனகராஜின் சாவு நிகழ்ந் திருப்பது தெரிய வந்துள்ளதால் முதற்கட்டமாக மர்மச்சாவு வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றினர்.
அதன்படி இந்திய தண்டனை சட்டம் 306–வது பிரிவின் கீழ் கனகராஜை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி அமலா பாய், அவரது கள்ளக்காதலன் விஜூ ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் இரு வரையும் கைது செய்தனர்.
பின்னர் இருவரையும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் கனகராஜின் சாவுக்காக முழுகாரணமும் தெரிய வரும். அதனடிப்படையில் வழக்கில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment