வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காளிசெட்டிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (36). இவர் ஊத்துக்குளி மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார். இவருக்கும், வெள்ளித்திருப்பூரை சேர்ந்த பூங்கோதைக்கும் (27) கடந்த 2012ல் திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது 15 பவுன் நகை, ஒரு மோட்டார் பைக், 5,000 ரூபாய் வரதட்சணை கொடுக்கப்பட்டது. கூடுதலாக, 5 பவுன் நகை வாங்கி வரும்போது பூங்கோதையை, கணவர் சிவக்குமார், மாமியார் மகுடீஸ்வரி, சிவக்குமாரின் தங்கை ரத்தினம் ஆகியோர் துன்புறுத்தியுள்ளனர்.
சம்பவத்தன்று, வரதட்சனை வாங்கிவரும்படி கூறி பூங்கோதையிடம் சிவகுமார் சண்டை போட்டுள்ளார். அப்போது, தலையை பிடித்து இழுத்து கதவில் மோதியதில், பூங்கோதையின் தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து கோபி அனைத்து மகளிர் போலீஸில், பூங்கோதை புகார் செய்தார். போலீஸார் விசாரணை செய்து, பூங்கோதையின் கணவர் சிவக்குமார், மாமியார் மகுடீஸ்வரி, மாமனார் ரத்தினம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
source URL
No comments:
Post a Comment