Balasubramaniam, resident of Thirumulaivoyil, aged 35 is serving as constable at Ambattur Police station
He is married to one Karpakavalli and they have two children out of this welock
His wife Kapakavalli has complained to the police commissioner LAST MONTH stating that she is tortured for additional dowry and that the constable is now living with another woman from Thirunelveli
The department has immediately initiated a case and is conducting an inquiry
There are NO arrests reported
ஆவடி:வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக, அம்பத்தூர் காவல் நிலைய கான்ஸ்டபிள் மீது,அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 35; அம்பத்தூர் காவல் நிலைய கான்ஸ்டபிள். இவரது மனைவி கற்பகவல்லி, 31. இவர்களுக்கு, இரு மகன்கள் உள்ளனர்.இந்த நிலையில், பாலசுப்ரமணியன் மீது, கமிஷனர் அலுவலகத்தில் கடந்த மாதம், கற்பகவல்லி புகார் அளித்தார்.அந்த புகார் மனு விவரம்:பெற்றோரிடம் வரதட்சணையாக, கணிசமான தொகையை பெற்று வரச் சொல்லி, அடிக்கடி தொந்தரவு செய்த பாலசுப்ரமணியன், குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்தார்.தற்போது தன்னை விட்டு பிரிந்து வாழும் அவர், சம்பள பணத்தை, திருநெல்வேலியை சேர்ந்த பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டு, அவருக்காக செலவு செய்து வருகிறார்.
இவ்வாறு, புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.கற்பகவல்லி அளித்த புகாரை அடுத்து, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், நேற்று முன்தினம், பாலசுப்ரமணியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment