Friday, July 11, 2014

mother of two elopes with loverboy !! Husband chases her and stabs her 2 death. Loverboy injured in scuffle

KapakavaLLi (33), a mother of two, was married to Kumar (40). She recently developed illicit relationships with a younger boy / stud and eloped with him . Shocked by this, The husband went after the duo and stabbed the wife to death .... The loverboy who interfered was also stabbed and the husband injured during the fight .. Police have registered a case

*********************************

கள்ளகாதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை தடுக்கமுயன்ற கள்ளக்காதலனுக்கு கத்திகுத்து


மாற்றம் செய்த நாள்:
வியாழன் , ஜூலை 10,2014, 7:35 PM IST
பதிவு செய்த நாள்:
வியாழன் , ஜூலை 10,2014, 7:35 PM IST

கோவில்பட்டியில் இருந்து கருமத்தம்பட்டிக்கு வந்து காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலனுக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த கொலை தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார்.

காதல் திருமணம்

து£த்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் மாடசாமி என்பவருடைய மகன் குமார்(40). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி மகள் கற்பகவள்ளி (33) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதே ஊரைச்சேர்ந்த சங்கரலிங்கம் என்பவருடைய மகன் கணேசனுக்கும்(30) கற்பகவள்ளிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

மனைவியின் கள்ளத்தொடர்பு பற்றிய விவரம் அறிந்த கணவர் குமார் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியை கண்டித்துள்ளார்.

கள்ளக்காதலுடன் உல்லாசம்

கணவருக்கு விவரம் தெரிந்துவிட்டதால் இனி உல்லாசமாக இருக்க முடியாது என்று எண்ணிய கற்பகவள்ளி கள்ளக்காதலன் கணேசுடன் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோளக்காட்டுபாளையத்திற்கு வந்து குடியேறினார். ஒரு வாடகை வீட்டில் கடந்த 2 மாதமாக கணவன், மனைவிபோல் இருவரும் வசித்து வந்தனர். கள்ளக்காதல் ஜோடியினர் ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தனர். மனைவியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்த கணவர் குமாருக்கு, மனைவியும், கள்ளக்காதலனும் கருமத்தம்பட்டி பகுதியில் இருப்பதை அறிந்து நேற்று காலை சோளக்காட்டுப்பாளையத்திற்கு வந்து விசாரித்தார். இருவரும் தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டினார்.

கத்திக்குத்து

அப்போது வீட்டுக்கதவை திறந்த கற்பகவள்ளியும், கள்ளக்காதலன் கணேசும் அதிர்ச்சி அடைந்தனர்.திடீரென்று மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மனைவி கற்பகவள்ளியை குமார் குத்தமுயன்றார்.இதனால் வெலவெலத்து போன அந்த பெண் வீதியில் இறங்கி ஓடினார்.அவரை விடாமல் விரட்டிச்சென்று மாறி, மாறி குமார் கத்தியால் குத்தினார். இதை தடுக்க போராடிய கள்ளக்காதலன் கணேசனுக்கும் இடதுமார்பில் கத்திக்குத்து விழுந்தது. மேலும் குமாருக்கு அங்கு நடந்த தகராறில் வலது கை மற்றும் காலில் கத்திகுத்து காயம் ஏற்பட்டது. மூன்று பேரும் ரத்தம் சொட்ட, சொட்ட சண்டை போட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, குமாரிடம் இருந்து கணேசனையும் கற்பகவள்ளியையும் மீட்டு ஒரு ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். குமாரை மற்றொரு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வயிற்றில் கத்திக்குத்து விழுந்ததால் ரத்தவெள்ளத்தில் மிதந்த கற்பகவள்ளி ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து போனார். கத்திகுத்து காயம் அடைந்த கள்ளக்காதலன் கணேசனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த படுகொலை தொடர்பாக குமார் மீது கருமத்தம்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் காயம் அடைந்துள்ளதால் போலீஸ் பாதுகாப்புடன் அரசு ஆஸ்பததிரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரத்தில் ஊர்விட்டு ஊர் வந்து மனைவியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




source

DAILYTHANTHI


*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment