Tuesday, July 29, 2014

Ramesh is missing since some days..


* My name is Durgadevi
* My family arranged a grand marriage for my my elder sister. That groom was Ramesh, a young man with lots of dreams and love for life !!  Just one day before her marriage sister ran away with her lover !!!
* My family did NOT know how to answer the society and groom's people ... so they made me marry Ramesh who was supposed to marry to my elder sister ...
* But I was ALREADY in love with another guy by name Prabhu ... I tried to resist the marriage but they forced me to marry Ramesh.
* I finally consented , got married and started living with Ramesh
* Ramesh went to Singapore in search of greener pastures, but got injured there. He had to return to Tamil Nadu (home town) & found an ordinary employment here.
* Our sex life wasn't great ... we also quarreled a lot
* Six months ago as our quarrels weren't ending, I left Ramesh (my legal husband) and went away to my grandma's house at Bhutamangalam ... My lover Prabhu was nearby and I got attracted to him again... We started living like husband and wife !!!
* Recently there was a festival at Bhuthamangalam and my legal husband Ramesh came searching for me. I introduced Ramesh my lover as a relative
* I had to admit my kid in school. Even there I gave my lover Ramesh's name as the father's name
* Me and my lover decided to unite. We could have easily eloped and married. However the legal hubby Ramesh was to get an insurance claim of Rs 17 lakhs for having been injured at Singapore. we decided to kill him to get the insurance !!

Police have questioned Prabhu who has casually accepted to have killed innocent Ramesh !!! Yes it was Durgadevi's plan he says !!

...........and.......... Legal hubby Ramesh is missing since some days .... police are searching for his body in the neadby canals and lakes !!!


full article from Junior Vikatan Tamil Magazine !!

''புருஷனைப் போட்டுத்தள்ளு!''
சீர்காழி சீக்ரெட்!

'என் கணவர் ரமேஷை இரண்டு நாட்களாகக் காணவில்லை' என்று கடந்த 17-ம் தேதி இரவு சீர்காழி காவல் நிலையத்தில் துர்காதேவி என்ற 30 வயது மதிக்கத்தக்க பெண் புகார் அளித்தார். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர் மீதே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்போன் இன்கம்மிங், அவுட்கோயிங் விவரங்களை ஆராய்ந்தபோது, குறிப்பிட்ட ஒரு எண்ணுக்கு அடிக்கடி பேசியது தெரிந்தது. அந்த எண்ணுக்குச் சொந்தக்காரர், புத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரபு. போலீஸார் சந்தேகப்பட்டது சரிதான். கள்ளக்காதல் காரணமாக ரமேஷ் கொலை செய்யப்பட்டுவிட்டார்.

 

போலீஸில் துர்காதேவி கொடுத்திருக்கும் வாக்குமூலம் இப்படி போகிறது... ''என் அக்காவுக்குப் பார்த்த மாப்பிள்ளைதான் களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு, அக்கா வேறு ஒருவருடன் போய்விட்டாள்.  கல்யாணம் நின¢றுவிடக்கூடாது என்பதற்காக, ரமேஷ§க்கு என்னைத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர் நான் அப்போது புத்தமங்கலத்தைச் சேர்ந்த பிரபுவைக் காதலித்து வந்தேன். என் விருப்பம் இல்லாமல், ரமேஷ§க்குத் திருமணம் செய்து வைத்துவிட்டனர். நானும் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தினேன்.

என் கணவர் சிங்கப்பூர் சென்று வேலை பார்த்தபோது, கீழே விழுந்து அடிபட்டுவிட்டார். இங்கே வந்து பழக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் அதிகம் என்னுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள மாட்டார். இதனால் எனக்கு அவர் மேல் வெறுப்பு வந்தது. எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.

ஆறு மாதங்களுக்கு முன்பு கோபித்துக்கொண்டு புத்தமங்கலத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி வேலை பார்த¢து வந்தேன். ஏற்கெனவே நான் காதலித்த பிரபுவும் அதே ஊர் என்பதால், எங்கள் காதல் மீண்டும் வளர்ந்தது. பிரபுதான் எனக்கு எல்லாமே என்று தோன்றியது. பிரபுவுக்குக் கல்யாணம¢ ஆகவில்லை. அதனால், அவனையே கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தேன். இருவரும் கணவன் மனைவி போலவே பழகி வந்தோம். புத்தமங்கலத்தில் கோயில் தீமிதி திருவிழா வந்தது. அப்போது என் கணவர் ரமேஷ் வந்தார். அப்போது பிரபுவை என் உறவுக்காரர் என்று ரமேஷ§க்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

என் குழந்தையை நீடூரில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக பிரபுவை அழைத்துக்கொண்டு போனேன். அப்போது அப்பா என்று பிரபு பெயரைத்தான் கொடுத்தார். 'உன் பிள்ளைக்கு நான் அப்பாவாக வேண்டும். உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால், அந்த ரமேஷ் உயிரோடு இருக்கக் கூடாது' என்று பிரபு அடிக்கடி சொல்வார்.  நானும், 'நீ என்னை கல்யாணம் செய்துகொள்வதாக இருந்தால் அவரை எது வேண்டுமானாலும் செய்துகொள்' என்று சொன்னேன். எப்படியாவது ரமேஷைத் தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்று பிளான் செய்தோம். ரமேஷின் போன் நம்பரை பிரபுவிடம் கொடுத்து பேசச் சொன்னேன். அதற்கு மேல் என்ன நடந்தது என¢று எனக்குத் தெரியாது. ரமேஷைக் காணவில்லை என்று அதன் பிறகுதான் போலீஸில் புகார் அளித்தேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

பிரபுவை போலீஸார் பிடித்ததும், 'நான்தான் கொலை செய்தேன்' என்று எவ்வித பதற்றமும் இல்லாமல் ஒப்புக்கொண்டதாக போலீஸ் சொல்கிறது. ''இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளலாம் என்றுதான் துர்காவிடம் சொன்னேன். 'ரமேஷ் சிங்கப்பூரில் வேலை செய்யும்போது அடிபட்டதற்கான இன்ஷூரன்ஸ் தொகை 17 லட¢சம் வரப்போகிறது. நாம் ஓடிப்போய்விட்டால் அது கிடைக்காது. ரமேஷை கொலை செய்துவிட்டால், அந்தப் பணம் நமக்குக் கிடைக்கும். அதன் பிறகு கல்யாணம் செய்துகொள்ளலாம்' என்று துர்கா சொன்னாள். அதனால்தான் ரமேஷைக் கொலைசெய்ய திட்டமிட்டோம்.

துர்காவிடம் இருந்து ரமேஷின் போன் நம்பரை வாங்கி, சீர்காழி பழைய பேருந்து நிலையத்துக்கு 16-ம் தேதி வரச் சொன்னேன். அவனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு கடவாசல் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் பகுதிக்குச் சென்றேன். ரமேஷ§க்கு அதிகமாக சரக்கை ஊற்றிக்கொடுத்தேன். அவரது பின்மண்டையில் கட்டையால் அடித்து, கழுத்தை நெரித்துக் கொலைசெய்தேன். பிணத்தை ஏரிக்கரை வாய்க்காலில் தள்ளிவிட்டு வந்துவிட்டேன்'' என்று சொல்லியிருக்கிறார் பிரபு.  

துர்காதேவி பற்றி உறவினர்களிடம் பேசினோம். ''அக்கா ஓடிபோயிட்டதால்தான் துர்காதேவிக்கும் ரமேஷ§க்கும் கல்யாணம் நடந்துச்சு. ரெண்டு பேருக்கும் 15 வயசு வித்தியாசம். அடிக்கடி சண்டை வரும். இப்படி புருஷனையே கொலை செய்ய எப்படி துணிவு வந்துச்சுன்னுதான் தெரியலை'' என்றார்கள்.

கள்ளக்காதல்கள் பெருகுவதும், அதற்கான கொலைகள் அரங்கேறுவதும் சமூகத்துக்கு ஆரோக்கியமானது இல்லை.

- ஏ.ராம்



souce

http:// www. vikatan. com /new/article.php?module=magazine&aid=97171


*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment