Monday, July 7, 2014

woman & loverboy kill hubby, stuff in sack, dump in well !! Caught by police monitoring cells phones !!

woman & loverboy kill hubby, stuff in sack, dump in well !! Caught by police monitoring cells phones !!

poor chap hubby had to work at thiruppur (another town) to meet ends . He was able to visit family only once or twice a month... wife used his absence and got loverboy settled in ahouse close by

finally the duo finished the husband as he was objecting to her relationship


*******

7 மாதத்துக்கு பிறகு துப்பு துலங்கியது

கிணற்றில் வீசி கணவன் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது

கருத்துகள்
02:22:08

Tuesday

2014-07-08

இளம்பிள்ளை : சேலம் மாவட்டம் பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் கடந்த 23.11.2013ம் தேதி பாலிதின் பையில் கட்டி வீசப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மிதந்தது. அந்த சடலத்தை கைப்பற்றி மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்தனர். வலது கையில் விஜி என பச்சை குத்தப்பட்டு இருந்தது. இதுபற்றி தீவிர விசாரணை நடத்த எஸ்.பி. சக்திவேல் உத்தரவின்பேரில், சங்ககிரி டிஎஸ்பி கோபால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இதுதொடர்பாக, அங்குள்ள பொம்மிடியார் லைன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் விஜயலட்சுமி (29) என்ற பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, கிணற்றில் சடலமாக கிடந்தது அவரது கணவர் யுவராஜ் என்பதும், கள்ளக்காதலனுடன் சேர்ந்து விஜயலட்சுமியே, அவரை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதையடுத்து, நேற்று காலை விஜயலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம், உடந்தையாக இருந்த பெரியசாமி ஆகியோரை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சவுரியூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் மகன் யுவராஜ் (31). இவருக்கும், விஜயலட்சுமிக்கும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தர்சினி (8), சந்தியா (4) ஆகிய குழந்தைகள் உள்ளனர். பெருமாகவுண்டம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருப்பூரில் தங்கி அங்கு உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் யுவராஜ் வேலை செய்து வந்தார். 2 மாதங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து குடும்பத்தை பார்த்து சென்றுள்ளார். இதனிடையே பிளம்பர் சண்முகம் என்பவருக்கும், விஜயலட்சுமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், விஜயலட்சுமியை யுவராஜ் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, யுவராஜை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தலையில் படுகாயத்துடன் மயங்கி விழுந்த யுவராஜின் உடலை பாலிதின் பை கொண்டு மூடியுள்ளனர். சண்முகம் தனது உதவியாளரான பெரியசாமி (49) என்பவரது உதவியுடன் யுவராஜை தூக்கிச்சென்று கிணற்றில் வீசினார். இதில், மூச்சு திணறி யுவராஜ் உயிரிழந்துள்ளார். இதுபற்றி விஜயலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=99867

*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment