Friday, July 5, 2013

Girl rejects groom @marriage !! NO POLICE CASE nothing. Groom in Tears. Relatives find another girl for groom. JUST IMAGINE if boy rejected girl at the marriage hall ?? 10 people would have been arrested now and another NISHA SHARMA would have been born..... And we are all saying poor ablaa naaris , the poor women are harassed !!!


BRIEF NOTES IN ENGLISH followed by news in Tamil
***********************************************************************

Girl Rejects groom at the reception JUST before marriage. GROOM in tears. Relatives find another girl for groom. Relative Girl accepts to wed the man .

* Ravi belongs to Idayanallur , near Maththagiri, Hosur, in Tamil Nadu on the border of Karnataka
* Shoba belongs to Maalur of Karanataka
* Marriage between the two was fixed
* A reception was being held at the Thirumala Thirupathi Devastana Chaultry at Hosur
* During the reception, suddenly Shoba threw away the garland and declared that she was not interested in the marriage and she has been forced into the marriage by her parents
* People were shocked and the Groom was in tears
* Relatives of the Groom consoled him
* Finally his relatives found another girl , Gita, Daughter of Suryappa, of Hosur, Therpappettai and spoke to her and her father
* the Girl and parents accepted to the match
* Gita was dressed up as the bride AND they exchanged garlands
* The marriage was conducted with pomp and ceremony

*****************************************
NEWS IN TAMIL
*****************************************



திருமணத்தை புறக்கணித்தார் மணப்பெண்: கலங்கிய மணமகனை கரம் பிடித்தார் உறவுப்பெண்




ஓசூர்: வரவேற்பு நிகழ்ச்சியின்போது, திருமணத்தை, மணமகள் புறக்கணித்ததால், கலங்கி நின்ற மணமகனை, உறவுப் பெண் கரம் பற்றினார்.


ஓசூர் அடுத்த, மத்திகிரி இடையநல்லூரைச் சேர்ந்தவர் ரவி, 30. கர்நாடகா மாநிலம், மாலூரைச் சேர்ந்தவர் ஷோபா. இருவருக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது.


திருமண வரவேற்பு:



ஓசூர், திருப்பதி திருமலை தேவஸ்தான திருமண மண்டபத்தில், நேற்று முன்தினம் இரவு, திருமண வரவேற்பு நடந்தது. விருந்து உபசரிப்பு, விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென, மணமகள் கழுத்தில் போட்டிருந்த மாலையை கழற்றி எறிந்து, "இந்த திருமணம் பிடிக்கவில்லை' என்றார். அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள், சமாதானம் செய்ய முயன்றனர்.


விருப்பம் இல்லை:



ஷோபா, "திருமணம் செய்யும் எண்ணம் இல்லை; பெற்றோர் கட்டாயப்படுத்தி, திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். கட்டாயப்படுத்தினால், வாழ மாட்டேன்' என்று கூறி, மண்டபத்தில் இருந்து வெளியேறினார். பெண்ணின் பெற்றோர், உறவினர்களும், தர்மசங்கடத்துடன் வெளியேறினர். திருமண வரவேற்பு மேடையில், மணமகன் ரவி, கண்கலங்கி நின்றார். அவரை பெற்றோர், உறவினர்கள் சமாதானம் செய்தனர். அப்போது, ஓசூர் தேர்ப்பேட்டையைச் சேர்ந்த, குரியப்பா மகள் கீதா, 25, என்ற பெண்ணை, திருமணம் முடிக்க, உறவினர்கள் முடிவு செய்து, கீதாவின் பெற்றோரிடம் பேசினர். இதற்கு, கீதாவும் சம்மதம் தெரிவித்தார். உடனடியாக, கீதாவுக்கு அலங்காரம் செய்து, அடுத்த சில நிமிடங்களில், மணப்பெண்ணாக மாற்றினர். வரவேற்பு நிகழ்ச்சியும், நேற்று காலை, திருமணமும் தடபுடலாக நடந்தது.



http://www.dinamalar.com/news_detail.asp?id=749728

No comments:

Post a Comment