60000 lawyers boycotted courts yesterday all over Tamil Nadu and Pondicherry, Condeming police stand and actions
short NON recourse notes in English followed by news in Tamil
********************************************************************
60000 lawyers boycotted courts yesterday all over Tamil Nadu and Pondicherry, Condeming police stand and actions
the lawyers claim that police have registered false complaints against lawyers who have tried to register a criminal case against people occupying land belonging to one of the lawyers in Thirunelveli
Condemning police's antagonist stand against lawyers, they have struck work
******************************************************
News in Tamil
******************************************************
போலீசாரை கண்டித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நேற்று, ஒரு நாள் நடந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில், 60 ஆயிரம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி டவுனில், வழக்கறிஞர் ஒருவருக்கு சொந்தமான, நீதிமன்ற தீர்ப்புப்படி, பாத்தியப்பட்ட நிலத்தை, ரியல் எஸ்டேட் கும்பல் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்தது. இது தொடர்பாக, 19ம் தேதி, திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் வழக்கறிஞர்கள் சேர்ந்து, திருநெல்வேலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர்.
ஆனால், புகார் கொடுத்த வழக்கறிஞர்கள், 40 பேர் மீது, காவல் நிலையத்தை தாக்கியதாகவும், கொலை முயற்சி செய்ததாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் மீது, போலீசார் கொண்டுள்ள விரோத போக்கையும், பழி வாங்கும் போக்கையும் கண்டித்து, நேற்று, ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் மீது, பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்து, நேற்று நடந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment