a dead body was recovered next to the Nagamangalam Lake last month 17th. A female corpse was found, with lot of stab wounds and the face was mutilated to avoid recognition. a 25 year old woman was found naked and cut up inside the gunny bag...
கொலையானதாக கருதப்பட்ட பெண் கள்ளக்காதலருடன் உலா வந்ததால் பரபரப்பு
Posted by: Sudha Published: Sunday, July 21, 2013, 11:42 [IST]
வேலூர்:
கொலை செய்து சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெண், உயிருடன் தனது கள்ளக்காதலருடன் இருப்பது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது உண்மையில் கொலையான பெண் யார் என்ற விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் கடந்த 17-ந்தேதி சாக்கு மூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது.
25 வயது மதிக்கதக்க அந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அடையாளம் தெரியாமல் இருக்க முகம் சிதைக்கபட்டிருந்தது.
சம்பவ இடத்தில் சிவப்பு கலர் சுடிதாரும், வெள்ளை நிற டாப்சும் கையுறைகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் திலகவதி என்பவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் கங்காதேவி (27) கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். எனவே பிணமாக கிடந்ததா அவரா என்று சந்தேகப்படுகிறோம். எனவே உடலைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திலகவதி, அவரது அண்ணன், அண்ணி சரஸ்வதி, கங்காதேவியின் கணவர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்தனர். வாலாஜா அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் உடலைப் பார்த்தனர். அப்போது அந்த உடல் தனது மனைவியுடையதுதான் என்று கணவர் சரவணன் கூறியுள்ளார். ஆனால் கங்காதேவியின் பெற்றோர் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறினர். இதையடுத்து மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதேசமயம், கங்காதேவிதான் கொலையானதாக கருதி போலீஸார் அந்த்க கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.
கங்காதேவியின் கணவர் திருவான்மியூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கங்காதேவி திருநின்றவூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வார். அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டு வாலிபரான கார்த்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கங்கா தேவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். கங்காதேவியின் சகோதரர் ரவிச்சந்திரன் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்து தகராறு செய்தார். இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கங்காதேவி மாயமானார். கங்காதேவியின் உடல் அடையாளம் காணப்பட்டதால் கார்த்திக்கைத் தேடி வந்தனர் போலீஸார்.
ஆனால் அப்போதுதான் அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது கங்காதேவி சாகவில்லை. மாறாக தனது கள்ளக்காதலர் கார்த்திக்குடன் கோவையில் பதுங்கியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் கங்காதேவியும் தனது உடல் அடையாளம் காணப்பட்டதாக வெளியான பத்திரிக்கைச் செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது சகோதரரை தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். போலீஸாரிடமும் பேசியுள்ளார். போலீஸாரிடம் மட்டும் தானும், கார்த்திக்கும் கோவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் கங்காதேவி.
மேலும் பாதுகாப்பும் கோரியுள்லார். இதையடுத்து போலீஸார் கோவை விரைந்துள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/21/tamilnadu-murdered-woman-found-alive-with-her-paramour-179529.html
near the spot a red colour salwar etc were found
police seized the articles and conducted inquiries
at about the same time, relatives of one married woman by name Gangadevi had filed a police complaint stating that their relative was missing. they were worried that the murdered woman could be ganagdevi. so the parents and husband of gangadevi were called to identify the body. the parents said they were NOT sure while the husband felt it could be his wife ....but nothing was confirmed
police ordered for DNA testing
Gangadevi's husband was working as a computer engineer at Thiruvanmiyur. They do not have children. His wife used to go to her parental house often ... it seems this Gangadevi had developed illicit relations with one Kartik who was their neighbour (at the parental house) , Gangadevi's parents seem to have come to know of this. They have tried to threaten Kartik. Gangadevi's brother has tried to warn Kartik and this has lead to a quarrel / fight
At about this time, Gangadevi has gone missing
So the police started searching for Gangadevi
That is when the police received a shocking news that Gangadevi had actually eloped with loverboy Kartik and the two of them were actually hiding in coimbatore
Police are conducting further investigation
************* detailed news in Tamil **************
கொலையானதாக கருதப்பட்ட பெண் கள்ளக்காதலருடன் உலா வந்ததால் பரபரப்பு
Posted by: Sudha Published: Sunday, July 21, 2013, 11:42 [IST]
வேலூர்:
கொலை செய்து சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்ட பெண், உயிருடன் தனது கள்ளக்காதலருடன் இருப்பது தெரிய வந்து பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது உண்மையில் கொலையான பெண் யார் என்ற விசாரணையை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் கடந்த 17-ந்தேதி சாக்கு மூட்டையில் இளம்பெண் பிணம் கிடந்தது.
25 வயது மதிக்கதக்க அந்த பெண் நிர்வாண நிலையில் கிடந்தார். தலையில் வெட்டுக் காயங்கள் இருந்தன. அடையாளம் தெரியாமல் இருக்க முகம் சிதைக்கபட்டிருந்தது.
சம்பவ இடத்தில் சிவப்பு கலர் சுடிதாரும், வெள்ளை நிற டாப்சும் கையுறைகளும் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராணிப்பேட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் திலகவதி என்பவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று சென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது அண்ணன் மகள் கங்காதேவி (27) கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். எனவே பிணமாக கிடந்ததா அவரா என்று சந்தேகப்படுகிறோம். எனவே உடலைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து திலகவதி, அவரது அண்ணன், அண்ணி சரஸ்வதி, கங்காதேவியின் கணவர் சரவணன் ஆகியோர் விரைந்து வந்தனர். வாலாஜா அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் உடலைப் பார்த்தனர். அப்போது அந்த உடல் தனது மனைவியுடையதுதான் என்று கணவர் சரவணன் கூறியுள்ளார். ஆனால் கங்காதேவியின் பெற்றோர் அதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறினர். இதையடுத்து மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டது. அதேசமயம், கங்காதேவிதான் கொலையானதாக கருதி போலீஸார் அந்த்க கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.
கங்காதேவியின் கணவர் திருவான்மியூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கங்காதேவி திருநின்றவூரில் உள்ள தாய் வீட்டுக்கு செல்வார். அப்போது அவருக்கும் பக்கத்து வீட்டு வாலிபரான கார்த்தி என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது கங்கா தேவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கண்டித்தனர். கங்காதேவியின் சகோதரர் ரவிச்சந்திரன் கார்த்திக் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்து தகராறு செய்தார். இதனால் இரு வீட்டாருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கங்காதேவி மாயமானார். கங்காதேவியின் உடல் அடையாளம் காணப்பட்டதால் கார்த்திக்கைத் தேடி வந்தனர் போலீஸார்.
ஆனால் அப்போதுதான் அவர்களுக்குத் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது கங்காதேவி சாகவில்லை. மாறாக தனது கள்ளக்காதலர் கார்த்திக்குடன் கோவையில் பதுங்கியிருப்பதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும் கங்காதேவியும் தனது உடல் அடையாளம் காணப்பட்டதாக வெளியான பத்திரிக்கைச் செய்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது சகோதரரை தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார். போலீஸாரிடமும் பேசியுள்ளார். போலீஸாரிடம் மட்டும் தானும், கார்த்திக்கும் கோவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் கங்காதேவி.
மேலும் பாதுகாப்பும் கோரியுள்லார். இதையடுத்து போலீஸார் கோவை விரைந்துள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/21/tamilnadu-murdered-woman-found-alive-with-her-paramour-179529.html
No comments:
Post a Comment