Saturday, December 1, 2012

அண்ணி வரதட்சணை புகார்: ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை




கணவன் மனைவிக்கிடையே  இருந்த மனக்கசப்பு பெரிதாக, கணவன் விஷம் குடிக்க, மனவியின் பொய் டவுரிப் புகார் கணவனது சகோதர்ன் மீது பாய, அவனும் இரயிலி குதித்து தற்கொலை செய்துகொள்ள, இந்த பொய் டவுரி 498அ வழக்குகள் ஒரு நல்ல குடும்பத்தையே எப்படி குலைக்கின்றன என்ற சோகக் கதை இது

அயிரம் ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொண்டபின்னும், ஆண்கள் செத்தால் கேட்பாரில்லை !!! ஆண்களது குடும்பத்தாரை கைது செய்தால் கேட்பாரில்லை

ஒரு பெண் செத்துவிட்டால், அவனது கணவன் முதல் வீட்டு நாய்குட்டி வரை எல்லாரையும் சிறையி அடைக்கும் இந்த சமூகம் எப்போது தான் திருந்துமோ தெரியாது !!!!

================== செய்தி ===ரிசம்பர் 1, 2012 ===============

அண்ணி வரதட்சணை புகார்: ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை 


Pudukkottai சனிக்கிழமை, டிசம்பர் 01, 2:38 PM IST  

ஆலங்குடி, டிச. 1-

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் வைத்திய லிங்கம். இவருக்கு மீனாட்சி சுந்தரம் (வயது 34), ராஜா (29) மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் ராஜா காஞ்சீபுரம் அருகே தனியார் கல்லூரியில் கேண்டீன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். ரவிச்சந்திரன் சென்னையில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராஜாவுக்கும்-ஆலங்குடி அருகே வானக்கன் காட்டை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் விமலாதேவிக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி திருமணம் நடந்தது.

இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால். விமலா தேவி அவரது தாய் வீட்டிற்கு சென்றார். பெற்றோர் அவரை சமாதானம் செய்து ராஜா வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனால் ராஜா வீட்டில் அவரை ஏற்றுக் கொள்ளாமல் வீட்டை பூட்டி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த விமலாதேவியின் உறவினர்கள் ராஜாவின் வீட்டு பூட்டை உடைத்து விமலாதேவியை குடியமர்த்தினர்.

இதுபற்றி ராஜாவின் சகோதரர் மீனாட்சி சுந்தரம் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் இதுபற்றி அறிந்த ராஜா, மனவேதனையில் ஊருக்கு வந்த இடத்தில் விஷம் குடித்தார். அவரை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது, அவரை பார்க்க விமலாதேவி மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். ஆனால் ராஜா அவர்களை பார்க்க மறுத்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து சகோதரர்கள் ரவிச்சந்திரன் மற்றும் மீனாட்சி சுந்தரம் மீது வரதட்சணை புகார் ஒன்றை போலீசில் கொடுத்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த ரவிச்சந்திரன் ஊருக்கு வந்தபோது, தன்மீது வேண்டுமென்றே அண்ணி தரப்பில் வரதட்சனை புகார் கொடுக்கப்பட்டு உள்ளதே என்று வேதனை அடைந்தார். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம் உத்தமர் கோவில் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு எடுத்துச்சென்ற உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுலகம் முன்பு வைத்து, நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

source
http://www.maalaimalar.com/2012/12/01143832/dowry-complaint-engineer-jump.html

1 comment:

  1. அடத் தே_____ கூட்டமே புருசன்பொண்டாட்டி சண்டையில ஒரு பொய்கேசு போட்டு ஒரு உயிர நாசம் பண்ணிட்டு போய்டிச்சி

    இதெபோல தான் என்னோட கேசுல இதுபோல் எலவுச்சட்டங்களை எல்லாம் தெரியாமல் எனது திருணமத்திற்கு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பரின் அம்மாவையும் பொய்கேசுல இழுத்துவுட்டு கைதுசெய்ய வைத்தார்கள்.

    http://ipc498a-victim.blogspot.com

    சில தே_____க்கு காலையில கக்கூஸ் வல்லன்னாகூட போலீஸ் ஸ்டேசன் ஒடிப்போய்
    பொய்கேசு போட்டுட வேண்டியது

    ReplyDelete