Friday, December 14, 2012

தற்போதைய NRI மனைவிகளின் பொய் வழக்கு நிலவரம்


‎===========================================
தற்போதைய NRI மனைவிகளின் பொய் வழக்கு நிலவரம்
===========================================
சமீபகாலமாக அமெரிக்காவில் வசிக்கும் NRI மனைவிகள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். கணவனை தன் வழிக்குக் கொண்டுவர 911 அவசர அழைப்புகளை தொடர்பு கொண்டு போலிஸை வீட்டிற்கு வரவழைத்து கணவனை குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பி வருகிறார்கள்.

அதே சமயத்தில் இந்தியாவில் உயர்நீதிமன்றத்தில் தன்னை அமெரிக்காவில் கணவன் அடைத்து வைத்திருப்பதாகக்கூறி பெற்றோரை வைத்து ஆட்கொணர்வு மனு பதிவு செய்து கணவனுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா என இரு பக்கத்திலிருந்தும் ஆப்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்னும் பல ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை!!!!!

இன்னும் சில மனைவியர் தந்திரமாக காரில் இருந்து இறங்கிக்கொண்டு போலிஸை தொலைபேசியில் அழைத்து கணவன் தன்னை அடித்து காரிலிருந்து தள்விட்டதாக புகார் செய்து கணவனை அந்த இடத்திலேயே கைது செய்து விலங்கு மாட்டி அனுப்பிவைக்கிறார்கள்.

இது பழைய டெக்னிக்காக இருந்தாலும் இப்போது சமீபத்தில் அதிக அளவில் நடந்துகொண்டிருக்கிறது. இது மருமகள்களின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறதா? அல்லது கணவன்களின் முட்டாள் தனத்தை காட்டுகிறதா? என்று தெரியவில்லை.

வெளிநாடுகளில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்.


No comments:

Post a Comment