Saturday, December 1, 2012

மனைவி புகார்...கணவன் வீட்டார் மீது கேஸ் ... ஏன் சார் விசாரணையே கிடையாதா ??? மனு நீதி. இ பி கோ வெல்லாம் என்னாத்துக்கு ?




கோவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர்

Coimbatore திங்கட்கிழமை, நவம்பர் 26, 2:56 PM IST
கோவையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண்ணை வீட்டை விட்டு துரத்திய கணவர்
கோவை, நவ. 26-

கரூரை சேர்ந்தவர் ஹேமா (வயது 28). இவர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், கோவை பி.என்.புதூரை சேர்ந்த கணேஷ் கண்ணன் என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 250 பவுன் நகை, 15 கிலோ வெள்ளி, வைர நகைகள், ரொக்கம் ரூ.20 லட்சம், சொகுசு கார், கணவருக்கு வைர பிரேஸ்லெட், தங்க கைக்கடிகாரம், நவக்கிரக மோதிரம் உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை என் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.

திருமணம் முடிந்த சில மாதங்களில் மேலும் ரொக்கம் ரூ.6 லட்சம் மற்றும் கார் வரதட்சணையாக கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். நகை மற்றும் பணம் வாங்கி வராத என்னை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டனர். கோடிக்கணக்கான மதிப்பிலான சீர்வரிசை பொருட்களையும் பறித்துக் கொண்டனர். இதற்கு காரணமாக கணவர் கணேஷ் கண்ணன், மாமனார் திருவம்பலம், மாமியார் தாமரை செல்வி, மைத்துனர் வேல்ராஜ் ஆகிய 4 பேர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். தகவலறிந்ததும் 4 பேரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


source
http://www.maalaimalar.com/2012/11/26145633/Woman-dowry-torture-out-of-the.html

============== கருத்து ================

1. என்னாது ? பொண்டாட்டி கேஸ் குடுத்தா போதுமா ??? உடனே "புருஷன் மீது வழக்கு " தானா ?? விசாரணை கேள்வி முறை கிடையாதா ? தினம் தினம் பொய் 498அ (டவுரி வழக்கு _ பதிவாகுதே ????

2. என்னாது கோடிக்கணக்காய் வரதட்சணை குடுத்தாங்களாமா ?? எம்மா குடுத்தீங்க ...வரதட்சணை குடுப்பது குற்றம் ன்னு சட்டத்தில இல்லை ??? இத்தினி கோடி அள்ளி வீசின பெண்வீட்டாருக்கு கைது இல்லையா ???? ஏன் ?? ஆண்களுக்கு மட்டும்தான் கைதா ??

3. தலைப்பு எழுதும் பத்திரிக்கைகளையும் சொல்லணும் .... "....கொடுமை படுத்திய துரத்திய கணவர்....." ன்னு முடிவுக்கே வந்து தீர்ப்பும் குடுத்திட்டாங்களே ...எப்படி சார் தெரியும் உங்களுக்கு ... ஒரு தரப்பு புகார் போதுமா ??? 


No comments:

Post a Comment