Thursday, December 6, 2012

Madras High Court sets aside divorce decree after 10 years !!! Husband is already re married and has two kids out of second marriage !!!!


#Tamil_News and Brief translation 

Abitha hails from Nagerkoil in Tamil Nadu. She married Eben Jeyenthiran in 2001. in 2002, Eben Jayanthiran filed a divorce petition stating that Abitha was mentally ill / psychiateric. Abitha did NOT attend the proceedings in spite of notices being served. So in 2002, the local court decreed a divorce ex parte

In 2009 (yes seven years after the decree) Abitha appealed at the Nagerkoil sessions court, against the lower court decree stating that she was unaware of the divorce and so her delayed appeal should be allowed. The Nagerkoil sessions court dismissed Abithas appeal !!

Abitha continued with an appeal the the Madras High court

Eben Jeyandiran also submitted a counter to that stating that Abitha had NOT appeared for proceedings, and that after the decree Eben was married and had kids from the next marriage

However the chennai HC said that courts should help litigants, and such (original decrees) are like pouring oil on burning fire .... !! The Honourable High court set aside the original divorce decree and asked Abitha and Eben Jeyandiran to start divorce proceedings all over again !!!


source
Dinamalar news paper 

சட்டத்தை காற்றில் பறக்க விட்டு உத்தரவிடுவதா : விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் கண்டனம்


மதுரை: சட்டம், விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கீழ்கோர்ட் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து வழங்கியுள்ளதாக, மதுரை ஐகோர்ட்கிளை, கண்டனம் தெரிவித்தது.

நாகர்கோவிலை சேர்ந்தவர் அபிதா. இவருக்கும் எபென் ஜெயந்திற்கும் 2001ல் திருமணம் நடந்தது. அபிதாவிற்கு மனநிலை சரியில்லை எனக்கூறி, எபென் ஜெயந்த் கீழ்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இதை, அனுமதித்து கோர்ட் 2002ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, காலதாமதத்திற்கு மன்னித்து மனுவை ஏற்கும்படி 2009ல் அபிதா தாக்கல் செய்த மனுவை, நாகர்கோவில் முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்தது. அபிதா,"எனக்கு மனநிலை சரியில்லை என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை. கீழ் கோர்ட் ஒருதலைப்பட்சமாக (எக்ஸ்பார்ட்டி) தீர்ப்பு வழங்கியது, எனக்கு தாமதமாகத் தெரியும். எங்களை சேர்த்து வைக்க உத்தரவிட வேண்டும்,' என ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
எபென் ஜெயந்த்," அபிதாவிற்கு மனநிலை சரியில்லாததை மறைத்து, திருமணம் செய்து வைத்தனர். கீழ் கோர்ட் விவாகரத்து வழங்கியது. நான், இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளேன். அவர் மூலம் 2 குழந்தைகள் பிறந்துள்ளன. அபிதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,' என மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் டி.ஆர்.சுப்பிரமணியம் ஆஜரானார்.
நீதிபதி: சட்டம், விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கீழ்கோர்ட் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து வழங்கியுள்ளது. இம்மாதிரியான வழக்குகளில், நீதிபதிகள் முன்னெச்சரிக்கை, கவனத்துடன் செயல்பட வேண்டும். நோட்டீஸ் அனுப்பியும், அபிதா ஆஜராகவில்லை என்பதற்காக இம்மாதிரி தீர்ப்பளிப்பது, மனசாட்சியை உலுக்கும் செயல்.
ஒரு பெண் மனநிலை சரியில்லாதவர் என்ற காரணத்திற்காக, ஒருதலைப்பட்சமாக தீர்ப்பளிக்கக்கூடாது. சட்டம், அப்பாவிகளுக்கு உதவி செய்யும் நோக்கில், இருக்க வேண்டும். ஒருவர் ஆஜராகவில்லை எனில், கோர்ட் தானாக முன்வந்து, ஒரு பாதுகாவலரை நியமித்து வழக்கை நடத்தியிருக்க வேண்டும். காலதாமதமாக மனுதாக்கல் செய்ததை மன்னித்து, மேல்முறையீட்டு மனுவை ஏற்க வேண்டும் என்ற அபிதாவின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார் அடுத்ததாக விசாரித்த நீதிபதி. இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போன்றது. இம்மாதிரியான தீர்ப்புகளை பார்த்து, ஐகோர்ட் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. விவாகரத்து, மேல்முறையீட்டில் கீழ் கோர்ட் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகிறது. 

மனுதாரர்கள், மீண்டும் கீழ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். கீழ்கோர்ட் சட்டத்திற்குட்பட்டு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார். 





http://www.dinamalar.com/News_Detail.asp?Id=600721

No comments:

Post a Comment