Thursday, December 13, 2012

அப்ப காதல் கல்யாணமும் இப்படி கோர்ட்டு கேஸ்னு தான் போய் நிக்குமா ???? என்னா கொடுமையடா சாமி !!!!



  • கோர்ட்டு, போலீஸ், வக்கீல் பாடு ஜாலி
  • குடும்பம் குழந்தகைள் காலி
  • இந்தியாவில் புது புது விததில் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்
  • இப்ப ஒரு கேஸ்ல தீண்டாமை ஒழிப்பு கேஸ் போட்டு இருக்காங்க !!!
  • இந்த பிரெச்சனை எல்லாருக்கும் .. ஏன் காதல் தம்பதியருக்கும் தான் !!
  • இந்த கொடுமை தாங்கலைன்னும் ஒருபக்கம் மக்கள் கதறும்போது, மருபக்கம் வாலிபர்கள் மனைவிக்காகா அலையோ அலைன்னு அலைகிறார்கள்
  • அதுதான் என்னான்னு புரியெல்லை !!!


==============செய்தி=============



கணவர் அளித்த புகாரின் பேரில் "காதல்' மனைவி மீது தீண்டாமை சட்ட வழக்கு


திருநெல்வேலி:நெல்லையில் கணவர் அளித்த புகாரின்பேரில் "காதல்' மனைவி மீது தீண்டாமைச்சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:பேட்டை அருகே நரசிங்கநல்லூரை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும், பாளை., ரெட்டியார்பட்டியை சேர்ந்த கோமதிசெல்வியும் காதலித்து கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.இந்நிலையில், கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. கோமதிசெல்வி மகனை கணவர் வீட்டில் விட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்றார்.கார்த்திக் மாமியார் வீட்டுக்கு பலமுறை சென்று மனைவியை தன்னுடன் வாழ வரும்படி அழைத்தார். கார்த்திக்குடன் செல்ல கோமதிசெல்வி மறுத்தார். பாளை., யில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த கோமதிசெல்வியை கார்த்திக் சந்தித்து மகனை பார்க்க வரும்படி அழைத்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது கோமதிசெல்வி, அவர் தாய் முத்துலட்சுமி, அக்கா அனு ஆகியோர் தன்னை அவதூறாக திட்டி மிரட்டல் விடுத்ததாக கார்த்திக் பாளை., போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.இதுதொடர்பாக கார்த்திக் நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் மனு அளித்தார். வழக்குப்பதிவு செய்யும்படி போலீசாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் விசாரணை நடத்தி, கோமதிசெல்வி, முத்துலட்சுமி, அனு மீது தீண்டாமை தடுப்பு சட்டப்பிரிவு, அவதூறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=605132

No comments:

Post a Comment