********************************************************
********************************************************
மனைவியை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு கழுத்தை அறுத்து மாமியார் படுகொலை
01:26:18
Saturday
2013-06-15
சென்னை : மதுராந்தகம் அடுத்த படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நாகா (50). இவரது மனைவி நவநீதம் (48). மகள் மீனா (25). மாமண்டூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஓட்டல் ஊழியர் அய்யப்பன் (30). இவருக்கும் மீனாவுக்கும் 2010ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீனா மீண்டும் கர்ப்பமாக உள்ளார்.
மாமண்டூரில் கோயில் திருவிழா நடக்கிறது. இதற்காக மகள் வீட்டுக்கு நவநீதம் நேற்று முன்தினம் சென்றார். இரவு அங்கேயே தங்கி விட்டார். இந்நிலையில் இரவு முழுவதும் வெளியே சுற்றிவிட்டு நேற்று காலை 8 மணிக்கு அய்யப்பன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் போதை யில் இருந்ததாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் எங்கே போனீர்கள், கடன் வாங்கி இப்படி குடித்து சீரழிக்கிறீர்களே? என்று மீனா கண்டித்துள்ளார்.
இதில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மீனாவை அய்யப்பன் அடித்தார். இதை நவநீதம் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், மனைவியை வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டினார். பின்னர் சமையல் அறையில் இருந்த அரிவாள்மனையை எடுத்து வந்து நவநீதம் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் நவநீதம் விழுந்து இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அய்யப்பன் தப்பியோடி விட்டார்.
இதுபற்றி படாளம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நவநீதம் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட மீனாவை மீட்டனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய அய்யப்பனை கைது செய்தனர்.
source
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=52479
No comments:
Post a Comment