Wife gouges out husbands eye saying she was "possessed" by the gods.
**************************************************************
Tiruppur District, Udumalai Town : Mallappan, a farmer, lives at Udumalai with his wife KaliammaL. They have three children out of the wedlock. Recently they had a pooja at home. After the two day special pooja , the wife claimed that she was "possessed" by the gods and stabbed her husband in his eyes!!!. Shocked and in a terrible plight, husband was admitted to the hospital but the doctors could NOT save his eye. He has completely lost his eyesight
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » தமிழகம்
சாமி வந்து கணவனோட கண்களை குத்திய மனைவி!
பார்வை பறிபோன பரிதாபம்!
**************************************************************
Posted by: Mathi Published: Saturday, June 29, 2013, 15:15 [IST]
**************************************************************
உடுமலைப்பேட்டை: பக்தி முற்றிப் போய் கட்டிய கணவனின் கண்களை மனைவியே நோண்டியெடுத்த சம்பவத்தால் உடுமலைப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்த விவசாயி மல்லப்பன் . இவரது மனைவி பெயர் காளியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இருவரும் 2 நாட்கள் விரதம் இருந்து தனியே வீட்டில் பூஜை செய்திருக்கின்றனர்.
அப்போது பக்தி முற்றிப் போன காளியம்மாள் திடீரென கணவரின் கண்களைக் குத்தியிருக்கிறார். இதில் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மல்லப்பன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மனைவி குத்தியதில் மல்லப்பனின் இரு கண்களின் கருவிழிகளுமே சேதமடைந்துவிட்டதால் அவருக்கு பார்வை பறிபோய்விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"சாமி கண்ணை குத்திடும்" என்பதற்கு ஏற்ப ஒரு சம்பவம் நடந்துவிட்டதாகவே உடுமலைவாசிகள் பேசிக் கொள்வதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
**************************************************************
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/29/tamilnadu-farmer-lost-eyes-the-name-god-178106.html
**************************************************************
No comments:
Post a Comment