*Oh My god What's happening to Marriages in India*
**********************************
**********************************
* Here's a terrible tale (mind you *ONLY wife's version*)
* the news in Tamil and rough translation are enclosed
* KalaivaNi, daughter of Perumal is a MA, B. Ed post graduate
* She got married to Kulotthungan of Chennai, Anna Nagar last August
* She has filed a dowry and harassment case recently
* while narrating her tale she claims that there has been NO first night with her husband
* when she asked her mother in law about it, the EVIL mother in law, who is ALSO a woman, tells kalaivaNi, "...you brought just 10 sovereigns dowry...you did NOT bring 100 sovereigns gold... if you can ..live with your husband ..."
* poor Ablaa Naari Kalaivani also claims that the EVIL mother in law says "....live with your brother in law (husband's brother !!)
* what a sad tale
* Kalaivani goes on to say she could NOT even make phone calls and inform her parents !! (*please note that most mobile to mobile / local Tamil NAdu calls are 50 paise per minute or max max 1 re per minutes !!*)
* by the way , do ANY of you think this looks like a template case ? a case where the same allegations are repeated ??
* if you do SO .... I AM NOT RESPONSIBLE !!
**********************************
* NEWS IN TAMIL
**********************************
கோவை அருகே புதுப்பெண் வரதட்சணை புகார்: கணவர்-மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு
கோவை அருகே புதுப்பெண் வரதட்சணை புகார்: கணவர்-மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்கு
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, ஜூன் 28, 4:08 PM IST
கோவை மாவட்டம் வால்பாறை வில்லோனி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் கலைவாணி (வயது 29). எம்.ஏ., பி.எட். பட்டதாரி. இவருக்கும் சென்னை அண்ணா நகரை சேர்ந்த குலோத்துங்கன் (35) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணாண கலைவாணி சென்னை அண்ணா நகரில் அவரது கணவர் குலோத்துங்கன், மாமியார் ஜெயா, கொழுந்தனார் வெற்றிவீரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது கணவர் வீட்டில் சித்ரவதை அதிகரிப்பதாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் கலைவாணி கூறியிருப்பதாவது:-
எனக்கும் குலோத்துங்கனுக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. எனது பெற்றோர் 10 பவுன் நகை போட்டு எனக்கு திருமணம் செய்து வைத்தனர். சென்னை அண்ணா நகரில் நான் எனது கணவர், மாமியார், கொழுந்தனாருடன் வசித்து வந்தேன். எனக்கும் எனது கணவருக்கும் முதலிரவே நடக்கவில்லை. இத்தனை மாதங்கள் ஆகியும் எங்களுக்குள் தாம்பத்ய உறவும் இல்லை.
எனது கணவருடன் தனி அறையில் இருந்தால் கதவை திறந்து வைத்துதான் இருக்க வேண்டும் என எனது மாமியார் வற்புறுத்துகிறார். எனது கணவருடன் தாம்பத்ய உறவு இல்லாதது குறித்து எனது மாமியாரிடம் கூறினேன். "உங்கள் மகன் என்னை விட்டு விலகி செல்கிறார்" என்று அவரிடம் நான் கூறினால், "நீ 10 பவுன் நகைதானே போட்டு வந்தாய். உனக்கு 100 பவுன் நகையா போட்டார்கள். உன்னால் எனது மகனுடன் வாழ முடிந்தால் வாழ். இல்லாவிட்டால் உனது தாய் வீட்டுக்கு போ" என்று எனது மாமியார் கூறுகிறார்.
மேலும் "*உனக்கு குடும்பம் நடத்த ஆசை இருந்தால் உனது கொழுந்தனாருடன் குடும்பம் நடத்து*" என்று கூறி மனதளவால் சித்ரவதை செய்கிறார்.
*மாமியார் வீட்டில் நடக்கும் சித்ரவதைகளை எனது பெற்றோரிடம் கூறலாம் என்று நினைத்தால் செல்போன் பேசவும் அனுமதிக்க மறுக்கிறார்கள்*. எனவே கணவர் குலோத்துங்கன், மாமியார் ஜெயா, கொழுந்தனார் வெற்றிவீரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கலைவாணி கூறியுள்ளார்.
புகாரின் பேரில் குலோத்துங்கன், ஜெயா, வெற்றிவீரன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
http://www.maalaimalar.com/2013/06/28160834/married-woman-dowry-complaint.html
No comments:
Post a Comment