- Police have filed a case against 5 of husband's family for demanding dowry from woman
- Jayashri (aged 22) , resident of chengodan gounder puthur , near Suulur, Coimbatore in Tamilnadu was married to one Pandi (aged 33), of uppukkottai, two years ago
- Gifts and Jewels were given during the marriage
- There have been various misunderstanding, fights and panchayat held between the couple
- At this stage , wife filed a complaint at Theni Police station stating that husband, father in law, mother in law and five of husband's family locked her up in her matrimonial home and tortured her
- Police have filed a case against 5 of husband's famly
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013,01:21 IST
தேனி: பெண்ணிடம் வரதட்சணை கேட்ட கணவன் உட்பட 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை சூலூர் அருகே செங்கோடன் கவுண்டன்புதூரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ, 22. இவருக்கும் வீரபாண்டி அருகே உப்புக்கோட்டையை சேர்ந்த பாண்டி, 33, என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது 20 பவுன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்க சீர்வரிசையும் கொடுத்துள்ளனர்.
குடும்ப பிரச்னை காரணமாக இருவரும் பலமுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, ஊர் பஞ்சாயத்தும் நடந்துள்ளது.
இந்நிலையில் ஜெயஸ்ரீ, தன் கணவன் மற்றும் மாமா தங்கமணி,54, மாமியார் ராணி, 50, உட்பட 5 பேர் தன்னை வீட்டில் அடைத்து கொடுமைப்படுத்தியதாகவும், 20 பவுன் நகையும், 2 லட்சம் ரூபாய் வரதட்சணையும் கேட்டதாகவும் தேனி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
தேனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=726166
No comments:
Post a Comment