Brief notes in English followed by news in Tamil
*****************************************************************
Devadanappatti, Teni district, Tamil Nadu
*****************************************************************
கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் பெண் கொலை : கணவன் கைது
*****************************************************************
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம்,எருமலைநாயக்கன் பட்டியில் கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நித்யா,25. இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், எழுவனம்பட்டியைச் சேர்ந்த ராஜபாண்டி,28, என்பவருக்கும்,ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரவணபாண்டி,4, லோகேஸ்வரன்,3, மற்றும் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. குடும்பத்துடன் எருமலைநாயக்கன்பட்டியில் வசிந்து வந்தனர்.
ராஜபாண்டி போர்வெல் வண்டியில் வேலை செய்ததால், வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராஜபாண்டி, அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
சொந்த ஊரான எழுவனம்பட்டியில் இருந்து, 6 மாதங்களுக்கு முன், மாமனாரின் ஊரான எருமலைநாயக்கன்பட்டிக்கு குடிவந்தனர். இங்கு வந்த பிறகும், ராஜபாண்டிக்கு மனைவி மீதான சந்தேகம் குறையவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேலையால் கழுத்தை இறுக்கி நித்யாவை கொலை செய்த ராஜபாண்டி,அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார்.மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, நித்யாவின் அம்மா முத்துமணி ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து ராஜபாண்டியை கைது செய்தார். அப்போது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
அவரது வாக்குமூலம்:
நித்யாவை அண்ணன் தங்கப்பாண்டிக்கு திருமணம் செய்ய முதலில் ஜாதகம் பார்த்தோம். அவருக்கு பொருத்தம் இல்லாததால், எனக்கும், நித்யாவிற்கும் திருமணம் நடந்தது. அண்ணன் தங்கப்பாண்டியுடன் சேர்ந்து, கூட்டுக் குடும்பமாக இருந்தோம்.
அப்போது, அண்ணனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டார். இதை பல முறை கண்டித்தும் நித்யா கேட்கவில்லை.
அதனால் தான், எருமலைநாயக்கன்பட்டிக்கு குடி வந்தோம். இங்கு வந்த பிறகும், நித்யாவிற்கும், அண்ணன் தங்கப்பாண்டிக்கும் உறவு நீடித்தது. இதனால் மனைவியை கழுத்தை இறுக்கி கொலை செய்தேன், என கூறியுள்ளார்.
*****************************************************************
source
http://www.dinamalar.com/news_detail.asp?id=746045
*****************************************************************
No comments:
Post a Comment