Young live in woman files harassment and dowry case
short notes in English followed by news in Tamil
* It gets rather terrible by the day
*****************************************
*****************************************
வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
சேலம்:சேலம், ராமகிருஷ்ணா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா, 24. பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி கவிதா, 20. இவர்களுக்கு முனியம்மாள் என்ற குழந்தை உள்ளது.
கவிதா, ஏற்கனவே, முதல் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்த போது, சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட, இருவரும், கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், சூர்யா, 20 ஆயிரம் ரூபாய், நகைகள் வாங்கி வருமாறு, கவிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். நேற்று , கவிதாவின் தலைமுடியை வெட்டி அலங்கோலப்படுத்தியதுடன், அடித்து காயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.
அங்கிருந்து தப்பித்து வந்த இளம் பெண், பெற்றோர், உறவினர் உதவியுடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=741516
No comments:
Post a Comment