!m
******************************************************************************
*********************************************
பரமக்குடி:
பார்த்திபனூரில் உருட்டு கட்டையால் தாக்கி, கணவரை கொலை செய்த மனைவி உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் செய்யாமங்கலத்தை சேர்ந்தவர் ஆதி, 32. இவருக்கும், பார்த்திபனூரை சேர்ந்த முத்துமாரிக்கும், 25, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சவுதியில் வேலை பார்த்து வரும் ஆதி, சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கோபித்துக்கொண்டு முத்துமாரி பார்த்திபனூரில் வசிக்கும் தந்தை பால்மேனி வீட்டிற்கு சென்றார்.
மனைவியை அழைத்து வர, நேற்று முன்தினம் ஆதி மாமனார் வீட்டிற்கு சென்றார்.
அங்கு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த முத்துமாரி, அவரது தந்தை பால்மேனி, சகோதரர் லட்சுமணன், அவரது நண்பர் பிரபு ஆகியோர் உருட்டு கட்டையால் ஆதியை தாக்கியதில், அவர் அந்த இடத்திலேயே இறந்தார். பின், ஆதியின் உடலை அருங்குளம் கண்மாயில் தூக்கி வீசினர்.
இதுகுறித்து முத்துமாரி, பால்மேனி, பிரபு ஆகியோரை பார்த்திபனூர் போலீசார் கைது செய்து, தலைமறைவான லட்சுமணனை தேடி வருகின்றனர்.
*******************************************
No comments:
Post a Comment