IF Powerful (DMK) party functionaries can be arrested so easily in a 498a complaint by the wife, imagine the plight of the common man
He and his brother Aravindan has been accused of kidnapping his own daughter at gun point along with some goons
காங்கயம்: துப்பாக்கியை காட்டி மிரட்டி, மகளை கடத்திய வழக்கில், முன் ஜாமின் பெற்ற பிரமுகர், மனைவி அளித்த வரதட்சணை புகாரால் கைதானார்.
திருப்பூர் மாவட்டம், முத்தூர், குட்டப்பாளையத்தை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் கார்த்திகேயன். இவரது மனைவி ரேணுகாதேவி. கருத்து வேறுபாட்டால், கணவரை பிரிந்து, சங்கராண்டம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன், கார்த்திகேயன் தனது தம்பி அரவிந்தன் மற்றும் அடியாட்களுடன், வீடு புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, ரேணுகாதேவியிடம் இருந்த மூன்று வயது மகளை கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமினுக்கு மனு செய்து விட்டு, சகோதரர்கள் தலைமறைவாகினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறினர். கடத்தப்பட்ட குழந்தையின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
இந்நிலையில், சகோதரர்கள் இருவரும் நேற்று காலை, ஐகோர்ட் உத்தரவுப்படி காங்கயம் கோர்ட்டில் சரணடைய வந்தனர். அவர்களை போலீசார் கோர்ட் வாசலில் கைது செய்தனர். வரதட்சணை கேட்டு, கணவரும் அவர் குடும்பத்தாரும் துன்புறுத்தியதாக,ரேணுகாதேவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திடீர் கைதால் கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கார்த்திகேயன் உறவினர்கள் ஏராளமானோர் கோர்ட் வாசலிலும், போலீஸ் ஸ்டேஷன் முன்பும் மறியலில் ஈடுபட்டனர். அதிரடிப்படை போலீசார் அப்புறப்படுத்தினர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் மற்றும் அரவிந்தன் இருவரும், காங்கயம் மாஜிஸ்திரேட் மோகனவல்லி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்
No comments:
Post a Comment