- Rosemary a resident of Munnar in Kerala was separated from her husband since 8 years had illicit relations with someone
- Recently she delivered a kid at her house
- She threw the kid away in a cattle shed to let the kid die miserably
- Fortunately the kid was rescued by village people and admitted to a hospital
- However, the kid died at the hospital and the case was investigated by the police
- Initially Rosemary claimed that she was raped and so she was pregnant !!!!!......
- later on further investigation by police the truth of her illicit relations and pregnancy + murder came to light
- since she claimed that she was tired and sick after delivery of the baby she was admitted to government hospital
- on being discharged she was arrested by police
மூணாறு : கணவர் பிரிந்து சென்ற நிலையில், தகாத உறவில் பிறந்த ஆண் குழந்தையை, கொலை செய்த கொடூரத் தாயை போலீசார் கைது செய்தனர்.
கேரளா, இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே புளிக்கரவயல், பாறப்பட்டியைச் சேர்ந்த ரோஸ்மேரி, 40. இவரை விட்டு, கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றதால், தாய் மாரியம்மாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தகாத உறவில், கடந்த 13ம் தேதி காலை ரோஸ்மேரி ஆண் குழந்தையை வீட்டில் பிரசவித்தார். இந்த குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு, வீட்டருகில் உள்ள மாட்டுத் தொழுவத்தின் மேற்கூரையில் வீசினார். அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அடிமாலியில் தனியார் மருத்துவமனையில் குழந்தை இறந்தது.
மறையூர் போலீசார் விசாரித்ததில், ரோஸ்மேரிக்கு பிறந்தது தெரியவந்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிரசவத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்ட ரோஸ்மேரி, அடிமாலி அரசு தாலுகா மருத்துவமனையில், போலீசாரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' ஆன ரோஸ்மேரியை, மூணாறு இன்ஸ்பெக்டர் ஷானிஹான் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோஸ்மேரியிடம் விசாரித்தபோது, சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததால்,கர்ப்பமுற்றதாக முதலில் தெரிவித்தார். இதனை போலீசார் நம்ப மறுத்ததால், தனக்கு, அருகில் வசிக்கும் ஒருவருடன் தொடர்பு இருந்ததை ஒப்புக் கொண்டார். கருவை கலைக்க முயன்று, இயலாமல் போனதாகவும், ஆகவே குழந்தையை பிறந்தவுடன் கொலை செய்ய முடிவு செய்து, மாட்டு தொழுவத்தின் மேற்கூரையில் வீசியதாகவும் கூறினார். ரோஸ்மேரி கூறிய நபரை காவலில் எடுத்து விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
http:// www. dinamalar. com/news_detail.asp?id=980394
No comments:
Post a Comment