நிச்சயம் செய்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு என்ஜினீயர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு
கோவை
திருமண நிச்சயம் செய்த இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த என்ஜினீயர் மீது போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.
திருமண நிச்சயதார்த்தம்
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், வேலூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் பாலாஜி (26) என்பவருக்கும் திருமணம் செய்வது என உறவினர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டது. பாலாஜி கோவை சுண்டக்காமுத்தூரில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.
ஜூன் 1–ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதால் பெண் வீட்டார் பத்திரிகை அடித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்.
பலமுறை உல்லாசம்
இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் மணப்பெண்ணும், பாலாஜியும் நெருங்கி பழகத் தொடங்கினார்கள். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றியதுடன், தனிமையிலும் சந்தித்து பேசினார்கள். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாலாஜி அந்த பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டார்.
தனிமையில் இருந்தபோது, பாலாஜி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. கணவராக வரப்போகிறவர் தானே என்று அந்த பெண்ணும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பலமுறை அவரிடம் உல்லாசம் அனுபவித்த பாலாஜி, பின்னர் அந்த பெண்ணிடம் பேசுவதை குறைத்துவிட்டார்.
கூடுதல் வரதட்சணை
இதனால் அந்த பெண் பாலாஜி வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசுவதை தவிர்க்கிறீர்கள் என்று கேட்டபோது, கூடுதலாக 50 பவுன் நகையும், ரூ.50 லட்சம் பணமும் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.
உடனே பெண்ணின் பெற்றோர் பாலாஜியின் பெற்றோரிடம் பேசியபோது, அவர்களும் மகனுக்கு சாதகமாகவே பேசினர். இதையடுத்து அந்த பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில், 'திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் என்னிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு, இப்போது கூடுதல் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் என்று மிரட்டுகிறார்' என்று கூறியிருந்தார்.
கற்பழிப்பு வழக்கு
போலீசார் பாலாஜி மீது கற்பழிப்பு வழக்கும், அவருடைய பெற்றோர் ஜெயராஜ்–தனலட்சுமி, உறவினர்கள் ராதாகிருஷ்ணன், ஜோதி, சேதுராணி ஆகியோர் மீது வரதட்சணை மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
source
http://www. dailythanthi . com/ 2014-05-15- Engineer-registered-a-rape-case
No comments:
Post a Comment