Husband get's cut when he goes to call back angry wife !! He attacks back and stabs father in law, mother in law; all happens instantly with NO adjournments, appeals or revision !!!
கோபித்து சென்ற மனைவியை அழைக்க வந்த கணவனுக்கு அரிவாள் வெட்டு மாமனார், மாமியாருக்கு கத்திக்குத்து
பதிவு செய்த நேரம்:2014-05-15 12:37:39திருச்சி: கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற காதல் மனைவியை அழைப்பதற்காக சென்றபோது ஏற்பட்ட தகராறில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறில் மருமகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருச்சி செந்தண்ணீர்புரம் பாரி நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் செல்வகுமார் (25). புரோட்டா மாஸ்டர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தந்தை மகேந்திரன், தாய் விஜயலட்சுமிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தக ராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் செல்வகுமார், திருச்சியில் தாயுடன் வசித்து வரு கிறார். தென்னூர் காமராஜ் நகரில் உள்ள டிபன் கடையில் வேலை செய்தபோது, அப்பகுதியை சேர் ந்த பாபு என்பவரின் மகள் சமீம் பானு (18) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலானது.
இதையடுத்து கடந்தாண்டு குடும்பத்தினரை எதிர்த்து இரு வரும் திருமணம் செய்து கொண் டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக மனைவி சமீம்பானுவி டம் வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வா என்று தகராறில் ஈடுபட்டார். தற்போது வரதட்சணை தர முடியாத சூழலில் தனது குடும்பத்தினர் இருப்பதாக சமீம் பானு கூறியுள்ளார். நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. இத னால் கணவரிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சமீம் பானு சென்றுவிட்டார்.
கோபித்து கொண்டு சென்ற மனைவியை அழைப்பதற்காக செல்வகுமார் நேற்று சென்றார். அப்போது அவருடன் மகளை அனுப்ப முடியாது என்று பாபு கூறியுள்ளார். இதையடுத்து குழந் தையை கேட்டு செல்வகுமார் தக ராறு செய்தார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாபு, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து செல்வகுமாரை வெட்ட முயன்றார். அப் போது தடுக்க முயன்ற செல்வகுமாருக்கு கையில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அருகில் இருந்த வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து பாபுவை செல்வ குமார் கத்தியால் குத்தினார். இதை தடுக்க வந்த பாபு மனைவி சபீதாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட னர். இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment