*********************************************************************************
சேலம், செப் 18–
கோவை அருகில் உள்ளது மலுமிச்சான்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராஜ்கண்ணன் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2–வது மனைவி செல்வராணி (வயது 37).
இவரை ராஜ்கண்ணன் சேலம் 5 ரோடு அருகில் உள்ள குரங்குசாவடி பகுதியில் குடிவைத்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர். இந்த நிலையில் செல்வராணி சேலம் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். இதில் தனது கணவர் 3 திருமணம் செய்து கொண்டுள்ளார். தன்னையும், தனது மகளையும் டார்ச்சர் செய்கிறார். பணம் நகைகளை பறித்து கொண்டு மிரட்டுகிறார். இதனால் அவரை விசாரிக்க வேண்டும் என மனு கொடுத்தார். இதன் பேரில் சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சப்–இன்ஸ்பெக்டர்கள் ரமணா, பாபு, ஏட்டுக்கள் அண்ணாத்துரை, மைதிலி செல்வி மற்றும் போலீசார் விசாரித்தனர்.
பின்னர் அவர்கள் இளம் பெண் செல்வராணியை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். இதில் அவர் கூறியதாவது:–
எனது கணவர் ராஜ் கண்ணன் ஏற்கனவே திருமணம் ஆனவர். நானும் ஏற்கனவே திருமணம் ஆனவள். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நானும், எனது கணவரும் பிரிந்து விட்டோம். இந்த நிலையில் ராஜ்கண்ணனுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னையும், எனது 2 மகள்களையும் சேலம் அழைத்து வந்து குடிவைத்தார். பின்னர் அவர் கோவையை சேர்ந்த பெண் ஒருவரை 3–வதாக திருமணம் செய்து கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான் அவரை தட்டிக்கேட்டேன். என்னை சமாதானம் செய்த அவர், எனது 30 பவுன் நகை மற்றும் பணத்தை வாங்கி கொண்டார். இதை நான் திரும்ப கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
பின்னர் அவர் எனது மகளிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என நான் கேட்டதற்கு உன்னையும், உன் மகளையும் வீடியோவில் எடுத்து வைத்துள்ளேன். பணம் , நகை கேட்டால் இந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அவரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
இந்த புகாரை அடுத்து போலீசார் ராஜ்கண்ணனை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மாற்றி மாற்றி தகவல்களை கூறி வந்தார். இதையடுத்து அவர் மீது பெண்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்தல், பணம், நகைகளை வாங்கி மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். பிறகு அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜ்கண்ணன் இதுவரை 3 திருமணம் செய்துள்ளார். அவர் வேறு சில பெண்களையும் திருமணம் செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று விசாரித்தும் வருகிறார்கள். இவர் பணியாற்றி வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்று ராஜ்கண்ணன் குறித்தும் விசாரித்தும் வருகிறார்கள்.
3 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் கைது சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.http : // www . maalaimalar . com/2014/05/18103120/3-women-married-arrested-for-f.html
No comments:
Post a Comment