20 year old Krishnaveni became friendly with one balakrishnan from the same area. they had sex many times before marriage and Krishnaveni became pregnant. Then Krishnaveni asked Balakrishnan to marry her. Balakrishnan refused initially, so Krishnaveni filed a police complaint. Police "advised" balakrishnan !! and so he married Krishnaveni at a registrar office !!! Allegedly the photo in this blog is from that marriage
Police have registered a case and are investigating.... Balakrishnan and family have absconded and are being searched by police
**********************************************
பொள்ளாச்சி, மே.10–
பொள்ளாச்சி மண்ணூர் மதுரை வீரன் கோவிலை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலித்தொழிலாளி. இவரது மகள் கிருஷ்ணவேணி (வயது 20). இவர் பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குருவேலன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணனுக்கும் இடையே நட்பு உருவானது. பாலகிருஷ்ணன் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வாரந்தோறும் வீட்டுக்கு சென்று வரும்போது ஒரே வீதியை சேர்ந்தவர் என்பதால் நட்பு உருவானது.
இது நாளடைவில் காதலாக மாறியது. காதல் ஜோடி தினமும் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வந்த பாலகிருஷ்ணன் காதலி கிருஷ்ண வேணியை தனிமையில் சந்தித்து பேசினார். பின்னர் அவரிடம் ஆசை வார்த்தை கூறி கோவைக்கு பஸ்சில் அழைத்து சென்றார்.
கோவையில் தான் தங்கயிருந்த அறைக்கு அழைத்து சென்ற பாலகிருஷ்ணன் அந்த அறையில் கிருஷ்ண வேணியுடன் உல்லாசம் அனுபவித்தார். அதன் பின்னர் தொடர்ந்து பல முறை சந்தர்ப்பம் கிடைத்தபோது எல்லாம் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இதன் காரணமாக கிருஷ்ண வேணி கர்ப்பமுற்றார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாலகிருஷ்ணனிடம் கேட்டார். அதற்கு பாலகிருஷ்ணன் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து கிருஷ்ணவேணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பாலகிருஷ்ணனை அழைத்து அறிவுரை கூறி கிருஷ்ணவேணியை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தினர். அதன் பேரில் பால கிருஷ்ணனும், கிருஷ்ண வேணியும் பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்து 1 வாரம் மனைவி கிருஷ்ணவேணியுடன் குடும்பம் நடத்திய பாலகிருஷ்ணன் வேலைக்கு செல்ல வேண்டும். கோவையில் விடுதியில் தங்கியிருப்பதால் வீடு பார்த்துவிட்டு கோவைக்கு அழைத்து செல்வதாகவும், மேலும் மேற்படிப்பு படித்து வருவதாகவும் தேர்வு எழுத வேண்டியுள்ளதால் 6 மாதம் கழித்து அழைத்து செல்கிறேன். அதுவரை கிருஷ்ணவேணியை அவரது தாய் வீட்டில் இருக்கும்படி கூறி அங்கு விட்டு சென்றார்.
அதன்பின்னர் கிருஷ்ணவேணியை பார்க்க பொள்ளாச்சிக்கு பாலகிருஷ்ணன் வரவில்லை. இந்நிலையில் பாலகிருஷ்ணனின் தாய் மயிலாத்தாள் மருமகள் கிருஷ்ண வேணியிடம் தன் மகனுக்கு வேறு திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்காக பெண் பார்த்து வருவதாகவும் வரதட்சணையாக ரூ.10 லட்சம் அளிக்க பலர் முன்வந்துள்ளனர் என்று தெரிவித்தார். நீ என் மகனுடன் வாழ வேண்டுமானால் வரதட்சணையாக பணம் வேண்டும். இல்லையெனில் என் மகனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் எனவும் எச்சரித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணவேணி கணவர் பாலகிருஷ்னனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் பாலகிருஷ்ணன் போனை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து பஸ்சில் கோவைக்கு சென்றார். கோவையில் தங்கியிருந்த கணவர் பாலகிருஷ்ணனிடம் நடந்தவற்றை கூறினார்.
அதற்கு பாலகிருஷ்ணன் என் தாய் சொல்லும்படி தான் கேட்பேன்.
உன்னை வேண்டாம் என கூறினால் எனக்கு நீ தேவையில்லை என்று கூறி அடித்து துன்புறுத்தினார். இதுகுறித்து கிருஷ்ணவேணி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவில் கணவர் பாலகிருஷ்ணன், மாமனார் குருவேலன், மாமியார் மயிலாத்தாள் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தகவலறிந்ததும் பாலகிருஷ்ணன் பெற்றோருடன் தலை மறைவானார். அவர்களே போலீசார் தேடி வருகிறார்கள்.http://www.maalaimalar.com/2014/05/10124339/dowry-torture-college-student.html
No comments:
Post a Comment