Monday, July 1, 2013

வாழ்ந்தா கள்ளகாதலனோட தான் வாழ்வேன்!! ; புருஷனாவது, புள்ளையாவது, குட்டியாவது !!!



... நான் இந்த கள்ளக்காதலனை கட்டிகிறென்னா, வேணாம்றானே .... என்னாய்யா ஞாயமிது ?? என்னாது எனக்கு மொதப் புருஷன்கிட்டேருந்து விவாகரத்து வேணுமா ???? சர்தான் போ.... ..... என்னாது என் புள்ளிங்களா ??? அதுங்க தான் பாட்டி வீட்டில வளறுதே !!!!!

ஐயா.... ஏட்டையா, இந்த கள்ளக்காதலன் என்னை ஏமாத்தாம இவன் கிட்ட எழுதி வாங்கிகிடுங்கையா !!!!!!!


********************************


குழந்தைகளை மறக்க வைத்த கள்ளக்காதல்

விஷம் குடித்து பெண் தற்கொலை முயற்சி


திருச்சி: கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். **கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்**.

**அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார்**.

குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

**இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர்**.

கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
கடந்த சில வாரங்களாக கவிதாவை பார்க்க யோகநாதன் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கவிதா, கடந்த, மூன்று நாட்களுக்கு முன் நள்ளிரவில், யோகநாதனின் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்து விட்ட கவிதாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த யோகநாதன், இங்கு ஏன் வந்தாய்? என சண்டையிட்டுள்ளார்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாருக்கு தகவல் சொல்ல, அவர்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, கள்ளக்காதல் ஜோடியின் விபரங்களை தெரிந்து கொண்டனர்.

இந்த பிரச்னையை தீர்த்துக் கொள்ள கள்ளக்காதல் ஜோடியை, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். **அங்கு போலீஸார் விசாரித்தபோது, யோகநாதனை திருமணம் செய்து கொள்வதில் கவிதா உறுதியாக இருந்துள்ளார்.
முதல் கணவனிடம் விவகாரத்து வாங்காமல், மற்றொருவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கவிதாவிடம் விளக்கிய மகளிர் போலீஸார், கணவனிடம் விவகாரத்து வாங்கி வர, ஓராண்டு கால அவகாசம் அளித்தனர்**.

**மேலும், அந்த ஓராண்டு காலமும், யோகநாதன் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும், கவிதாவையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் எழுதி வாங்கிக் கொண்டு, இருவரையும் அனுப்பி வைத்தனர்**.

நேற்று முன்தினம் மாலை தனது உறவினருக்கு ஃபோன் செய்த கவிதா, தான் பூச்சி மருந்து குடித்து விட்டு, கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் கிடப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது, பழைய தாசில்தார் அலுவலகம் அருகே மயங்கிய நிலையில் கவிதா கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார், அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். முதலில் கவிதாவைப் பற்றி அலட்சியமாக பேசிய அவரது தாயார், போலீஸாரின் அறிவுரைக்கு பின், நேற்று முன்தினம் இரவு வந்து தனது மகளை பார்த்து கண்ணீர் வடித்தார்.

இதுதொடர்பாக கவிதா மீது வழக்கு பதிவு செய்து, கோட்டை மகளிர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

blank.gif

http://www.dinamalar.com/news_detail.asp?id=743399

No comments:

Post a Comment