Thursday, June 6, 2013

Inter caste love marrg; both eloped; girl's father commtd suicide; lead to riots in TN, girl now girl wants to live with mother !! Husband , wife, relatives appeared at Chennai HC ; HC asked the girl to reply.. Girl who came with mother said she want's to live with mum !!

News in Tamil and gist in English
  • Inter caste love marriage in Tamil Nadu that made it to headlines
  • There was opposition from both sides
  • Couple eloped and got married last year
  • Following threats, police got involved and let the couple go home together / live together
  • Following this, Girl's father committed suicide
  • Some time later, girl returned to her parent's house
  • now she says she will live with her mother !!
  • Husband is trying to tell everyone that wife will come back



தர்மபுரி காதல் திருமணத்தில் மாற்றங்கள்!

கணவரைப் பிரிந்து
தாயுடன் வாழ விரும்புவதாக இளம்பெண் மனு!


பெரும் விவாதத்தை ஏற்படுத்திய தர்மபுரி திவ்யா காதல் விவகாரத்தில், தனது தாயுடன் வாழ விரும்புவதாக திவ்யா அளித்த வாக்குமூலத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கெட்டாய் நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். செல்லன் கொட்டாயை சேர்ந்தவர் திவ்யா. இவர்கள் இருவரும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி வீட்டை விட்டு ஓடினார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் தரப்பில் கடத்தல் என்றும், பையன் தரப்பில் காதல் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. போலீசார் இளவரசனையும் திவ்யாவையும் சேர்ந்து வாழ அனுப்பி வைத்தனர். மனம் உடைந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு தர்மபுரியில் கலவரம் ஏற்பட்டது.

பத்து மாதங்கள் சென்ற நிலையில் திவ்யா, கடந்த 04.06.2013 அன்று தனது தாயார் வீட்டுக் சென்றுள்ளார். அதேநேரத்தில் திவ்யாவை காணவில்லை என்று தர்மபுரி டவுன் போலீசில் இளவரசன் புகார் செய்தார்.

இந்த நிலையில் திவ்யாவின் தாய் தேன்மொழி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருந்த கேபியஸ் கார்பஸ் மனு இன்று 06.06.2013) நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

திவ்யாவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவருடன் தாயாரும், வழக்கறிஞர்களும் வந்தனர். அதேபோல் இளவரசனும் தனது தாயாருடனும், வழக்கறிஞர்களுடனும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

நீதிபதிகள் திவ்யாவை தங்கள் அருகில் அழைத்தனர். நீதிபதிகள் முன்பு சென்றதும் திவ்யா, "என் அப்பாவும் இறந்துவிட்டார். அம்மா தனியாக இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

பின்னர் நீதிபதிகள் இளவரசனும் வந்திருக்கிறார். நீ யாருடன் செல்ல விரும்புகிறாயா என்றதும் நான் மிகுந்த மனக்குழப்பத்தில் இருக்கிறேன். என் அம்மாவுடன் செல்லவே ஆசைப்படுகிறேன் என்றார்.

இளவரசன் தரப்பில் திவ்யாவை கடத்தி சென்று மிரட்டி இருக்கிறார்கள் என்று வாதிட்டனர். இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது, நாங்கள் அந்த பெண்ணிடம் தெளிவாக விசாரித்து விட்டோம். யாரும் கடத்தவில்லை. தானாகவே தாய் வீட்டுக்கு சென்றதாக கூறினார். மேலும் தான் மனக்குழப்பத்தில் இருப்பதாகவும் தாயுடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

எனவே அவரது விருப்பத்துடன் தாயுடன் செல்ல அனுமதிக்கிறோம். மேலும் இந்த வழக்கை ஜூலை முதல் வாரத்துக்கு தள்ளி வைப்பதாகவும் கூறினர். திவ்யாவின் தாய் தேன்மொழி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் திவ்யா வீட்டில் ஆண் துணை இல்லை. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.

இதையடுத்து திவ்யா வீட்டுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோர்ட்டை விட்டு வெளியே வந்த இளவரசனும், திவ்யாவும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அவரவர் பெற்றோருடன் சென்றனர்.

இதுகுறித்து திவ்யா வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 4ஆம் தேதி திவ்யா தனது தாயார் இருக்கும் இடத்திற்கு போன் செய்து, நான் அங்கிருந்து வந்துவிட்டேன். நான் அம்மாவுடன் வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து திவ்யா தனது தாயாருடன் சென்னைக்கு வந்தார். இந்தநிலையில் திவ்யா தாயார் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது திவ்யா நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி முன்பு, இப்போது உள்ள சூழ்நிலையில் நான் எனது அம்மாவுடன் வாழ வேண்டும் என்று கூறியுள்ளார். எனக்கு தனிமை வேண்டும் என்று நீதிமன்றத்தில் சொன்னார்கள். அதனை ஏற்று நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

இளவரசன் தரப்பு வழக்கறிஞர் ரஜினி செய்தியாளர்களிடம் கூறியதாவது, திவ்யா, தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மன உளைச்சலில் இருக்கிறார். ஆகையால் தற்காலிகமாக அவருடன் இருக்க விரும்புகிறேன். மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்வதாக சொல்லியிருக்கிறார் என்றார்.

படங்கள்: ஸ்டாலின்


source

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=100938


No comments:

Post a Comment