Police arrest gang selling infants at governmt hospital. Gang targeted unwed mothers, illicit lovers' kids. 100+ kids sold in just 1 year from that 1 hospital !!!
****************************************************************
Police have arrested a gang selling Children from the Ambur Government hospital (Ambu - Vellore ) at Tamil Nadu.
This Gang targeted (infants of ) illicit lovers, un wed mothers and sold those infants
The gang is suspected to have sold at least 100+ kids the last one year alone
One such case has been highlighted in the news report
Ravi is a resident of Thiruvalluvar nagar near ambur. His wife's name is latha (20 ) . The coupled had left their homes after a love marriage. They were struggling with their lives when it is alleged that Ravi went away and did not take care of Latha
Latha gave birth to a male child a few days ago
As a single mother, probably Latha did not want the kid ..or probably had other ideas
Knowing this the gang approached Latha and started talking to her
They agreed with her to buy the kid for rs 10,000
In the meanwhile they also arranged a couple who would buy the kid, from Govindapuram ... the prospective buyers , Saraswathi and Muthappa were ready to buy the infant for rs 50000
Advance money was transacted etc
The balance was being paid to Latha who was about to sign away the infant on a rs 20 stamp paper
The police were alerted at the last minute and they rushed to the spot and arrested mehtha, yashoda and damodaran from the gang
Inquiries are on with Latha who planned to sell the kid and the couple muthappa and saraswathi who planned to buy the kid
detailed news below
******************************************************************************
அரசு மருத்துவமனையில் ஒரே ஆண்டில் 100 குழந்தைகள் விற்பனை
தினமலர் – 8 மணிநேரம் முன்வேலூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தினமும், 30க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கின்றன. இதில், கள்ளக்காதல், காதலில் கர்ப்பமாவது போன்றவற்றால், குழந்தை பெற்றுக்கொள்வோரும் உண்டு. இதை பயன்படுத்தி, ஒரு கும்பல், இது போன்று பிறக்கும் குழந்தைகளை விற்று வருகின்றனர். பல ஆண்டுகளாக, ஆம்பூர் மருத்துவமனையில், இது நடந்து வருகிறது. மருத்துவமனை ஊழியர்களுக்கும், இதில் தொடர்பு இருப்பதாக, கூறப்படுகிறது.
ஆம்பூர் அடுத்த, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லதா, 20, என்பவருக்கு, கடந்த, 20ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனைக்கு வந்த போதும், குழந்தை பிறந்த பின்னரும், அவருடன் உதவிக்கு யாரும் வரவில்லை. இதை மோப்பம் பிடித்த குழந்தை விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள், லதாவிடம், நைசாக பேச்சு கொடுத்தனர். ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட லதா, இரு குடும்பத்தினர் எதிர்ப்பை சமாளிக்க போராடியுள்ளார். இந்நிலையில், கர்ப்பமானார்; ரவி பிரிந்து சென்று விட்டார். அதன்பின், ரவி கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தான், லதாவுக்கு குழந்தை பிறந்தது என்பதை தெரிந்து கொண்டனர். குழந்தையை, 10 ஆயிரம் ரூபாய்க்கு, விற்க ஒப்புக்கொண்டு, முன்பணமாக, 2,000 ரூபாய் பெற்றுக் கொண்டார். கோவிந்தாபுரத்தை சேர்ந்த, சரஸ்வதி - முத்தப்பா தம்பதியருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கு, அந்த குழந்தையை விற்க முயற்சி நடந்தது. அவர்களிடம் இருந்து, 25 ஆயிரம் ரூபாய், முன்பணமாக பெற்றவர்கள், நேற்று காலை, மருத்துவமனைக்கு வந்தனர். லதாவிடம், 8,000 ரூபாய் கொடுத்து, 20 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கெண்டிருந்தனர். இதுகுறித்து, ஆம்பூர் டவுன் போலீசுக்கு தெரியவந்தது. போலீசார் விசாரணை நடத்தி, ஜோலார்பேட்டையைச் சேர்ந்த, மேத்தா, 34, யசோதா, 30, தாமோதரன், 36, ஆகியோரை கைது செய்தனர். குழந்தையை, விற்க துணிந்த லதா, வாங்க முயன்ற, சரஸ்வதி - முத்தப்பா தம்பதியர் ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது. கடந்த ஓர் ஆண்டில், 102 குழந்தைகளை, இந்த கும்பல் விற்றது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
******************************************************************************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment