Saturday, August 24, 2013

Police steal 30 lakhs from Highway thieves !!! Police hide 30 lakhs &jail them in simple case !!! matter revealed when a different police party follow original highway robbery case !!!

Police steal 30 lakhs from Highway thieves !!! Police hide 30 lakhs &jail them in simple case !!! matter revealed when a different police party follow original highway robbery case !!! 

 
*************************************************************************
 
"...........விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் சேர்ந்து, 30 லட்சம் ரூபாயைச் சுருட்டியது தெரியவந்தது. ............"
 
 
Krishnagiri, Tamil Nadu : the shocking facts of police taking away rs 30 lakhs from dacoits who had already snatched money from travelers has been exposed during a police raid
 
 
Vins a resident of animur kuLLa veNNakkaadu of namakkal district runs a borewell spare parts business. He had been purchasing goods from his brother who runs a manufacturing unit making borewell parts and selling them locally
 
Sundaram (30) and Shekar (45) are employed with him
 
On July 6th, Sundaram and Shekar took 90 lakhs with them and travelled to Bangalore from Salem on a government bus
 
Suddenly some people entered the bus, threw chilli powder on the faces of Sundaram and Shekar , snatched the money bag and ran away in a goods vehicle 
 
Police registered a case and arrested six people involved in that snatch including a driver of that goods vehicle . Two of the thieves escaped. Rs 35 lakhs was recovered from the ones who were arrested but the balance money was NOT recovered. So police continued searching for the two who had escaped with balance cash 
 
While trying to trace the remaining money and two escaped thieves, police stumbled upon a shocking revelation that Katpadi police who had conducted raids in local houses had found rs. 41 lakhs in a house and the two dacoits some days ago. 
 
The police declared ONLY 11 lakhs , kept 30 lakhs for themselves, arrested and jailed dacoits in a simple case !!!
 
Now police have recommended action / suspension of the DSP and inspector who were involved in such a cover up and misappropriation of stolen money 
 
All accused are arrested, they would be paraded before courts AFTER actions has been taken on the involved DSP and inspector !!
 
Detailed news below 
 
*******************************************************************************




ரூ.30 லட்சம் சுருட்டிய டி.எஸ்.பி., - இன்ஸ்.,: விசாரணையில் திடுக் தகவல் அம்பலம்


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பஸ்சில் பயணம் செய்தவர்களிடம், 90 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த வழக்கில், தொடர்புடைய இருவரிடம், டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர், 30 லட்சம் ரூபாயைச் சுருட்டியது, விசாரணையில் தெரியவந்து உள்ளது.
நாமக்கல் மாவட்டம், அனிமூர் குள்ள வண்ணான்காடு பகுதியைச் சேர்ந்தவர், போர்வெல் ரிக் வண்டி அதிபர், வின்ஸ், 40; ரிக் வண்டிகளுக்கான உதிரி பாகம் கடை வைத்துள்ளார். இவரிடம், சுந்தரம், 30, சேகர், 45, ஆகியோர் பணிபுரிந்தனர். வின்ஸ், பெங்களூரில் ரிக் உதிரி பாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நடத்தி வரும் தன் சகோதரர்களிடம் இருந்து, கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வந்தார்.


பஸ்சில் கொள்ளை:

கடந்த, ஜூலை 6ம் தேதி இரவு, சேகரும், சுந்தரும், 90 லட்சம் ரூபாயுடன், உதிரி பாகம் வாங்க, சேலத்தில் இருந்து, பெங்களூரு செல்லும் அரசு பஸ்சில், பயணம் செய்தனர். 7ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு, பஸ்சில் வந்த மூன்று மர்ம நபர்கள், திடீரென இருவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி, பணப்பையைப் பறித்து, ஓடும் பஸ்சில் இருந்து குதித்துத் தப்பினர். தனிப்படை அமைத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ரிக் வண்டி கம்பெனியில், ஆறு மாதங்களுக்கு முன் பணிபுரிந்த, வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ஒருவரின் திட்டப்படி, பணம் பறிக்கப்பட்டது தெரிந்தது. பணத்தைப் பறித்த கும்பல், அங்கிருந்து சரக்கு வாகனத்தில் தப்பிச் சென்றதும் தெரிந்தது. அந்த வாகனத்தின் டிரைவர் உள்ளிட்ட, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட, ஆறு பேரை, கைது செய்த தனிப்படை போலீசார், அவர்களிடம் இருந்து, 35 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர். தலைமறைவான இருவரைப் பிடிக்க, தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.


"லபக்'கிய போலீசார்:

கடந்த, 10 நாட்களுக்கு முன், காட்பாடி போலீசார், அந்தப் பகுதியில் உள்ள விடுதியில் சோதனை செய்த போது, 41 லட்சம் ரூபாயுடன் தங்கியிருந்த இரு வாலிபர்களைக் கைது செய்தனர். பணத்தைப் பறிமுதல் செய்த போலீசார், 11 லட்சம் ரூபாயை மட்டும் கணக்குக் காட்டி, மீதி பணத்தைச் சுருட்டி, சாதாரண வழக்கில் இருவரையும் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். கோவை ஐ.ஜி.,யிடம், கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்தனர். வேலூர் சிறையில் உள்ள இருவரிடம், ஐ.ஜி., மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியே விசாணை நடத்தினர். 

விசாரணையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் சேர்ந்து, 30 லட்சம் ரூபாயைச் சுருட்டியது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக டி.ஜி.பி.,க்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள, ஆறு பேரையும், தனித்தனி இடங்களில் தங்க வைத்துள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து பணத்தைச் சுருட்டிய, டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவரும் விரைவில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர் எனவும், அதன் பின் கொள்ளைக் கும்பலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போவதாகவும், போலீசார் தெரிவித்தனர்.






*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment