Tuesday, August 13, 2013

Advocates being murdered !! NO guarantee for lives of advocates !! who is responsible for this ??? சமீப காலமாக, வழக்கறிஞர்கள் உயிருக்கு, உத்தரவாதமில்லாத நிலை உள்ளது !!!


Advocates are boycotting courts in Tamil Nadu and Pondy after a series of attacks on and murder of advocates 

They claim that there is NO guarantee for the lives of advocates

They urged the police to investigate and nab the culprits engaged in such activities 

They also demanded special team to investigate the murder of an advocate at Salem 



தமிழகம், புதுச்சேரியில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2013,22:45 IST

சேலம்: சேலத்தில், வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று, தமிழகம், புதுச்சேரியில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், கலெக்டர் அலுவலகம் அருகில், நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர் இளம்வழுதி, மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, 5ம் தேதி, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில், வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். ஒரு மாதத்துக்கு முன், வெண்ணந்தூரில், வழக்கறிஞர் நடராஜன் கொல்லப்பட்டார். சேலத்தைச் சேர்ந்த, மூத்த வழக்கறிஞர் ஜெயபால் கடத்தப்பட்டு மீட்கப்பட்டார். அதேபோல், திண்டிவனத்தில், வழக்கறிஞர் தலையில், கல்லைப் போட்டு கொலை செய்தனர். சமீப காலமாக, வழக்கறிஞர்கள் உயிருக்கு, உத்தரவாதமில்லாத நிலை உள்ளது. பொதுமக்கள் நலனுக்காக, நீதிமன்றத்தில் வாதிடும் வழக்கறிஞர்களை வெட்டி சாய்க்கும் கும்பலை, போலீசார், உடனடியாக கண்டறிந்து, கைது செய்ய வேண்டும். இந்த தொடர் சம்பவங்களை கண்டித்தும், சேலம் வழக்கறிஞர் இளம்வழுதியை படுகொலை செய்தவர்களை, தனிப்படை அமைத்து, விரைவில் கைது செய்ய வலியுறுத்தியும், நேற்று, தமிழகம், புதுச்சேரியில், 60 ஆயிரம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.




***********************************

FOLLOW 
@ATMwithDick on twitter or 
http://evinayak.tumblr.com/ (recent blog so recent cases ) 
FOR 100s of high court and supreme court cases


regards

Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist

No comments:

Post a Comment