அரியலூர், செப். 3–
அரியலூர் அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி உமா (வயது 29). இவர்களது மகள் ஹரிணி (7). இவள் அங்குள்ள பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக உமாவின் கணவர் வடிவேல் விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பின்பு மகள் ஹரிணியுடன் உமா தனியாக வசித்து வந்தார். குடும்பத்தை வழிநடத்த பெரம்பலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே நிறுவனத்தில் அருண்குமார் என்பவரும் வேலை பார்த்தார். அவருடன் உமாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்தனர். பல நேரங்களில் உமாவுடன் அருண்குமார் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அருண்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்த உமா மனமுடைந்தார்.
இதைத்தொடர்ந்து மகள் ஹரிணியை வீட்டில் சேலையில் தூக்கு போட்டு கொன்று விட்டு தானும் அதே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்–இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உமா மற்றும் ஹரிணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அருண் குமாருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்.சில் என் சாவுக்கு நீ தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் வீட்டில் ரத்தத்தால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது.
அதில் என்னுடைய வாழ்க்கையை ஏமாற்றி மோசடி செய்து விட்டாய் என்று அருண்குமார் மீது புகார் குறிப்பிட்டு இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
http://www.maalaimalar.com/2013/09/03152327/young-woman-child-suicide-near.html
No comments:
Post a Comment