Wife files dowry, torture, attempted bigamy complaints on Ooty (Krishnagiri) S.I.
Ooty : Krishnagiri : Tamil Nadu
One Mr. Saktivel is working as SI in the engineering / IT section of Oooty police.
One Ms. Nisha from Machcinakudi , Nilagiri district has filed a complaint on Sakthivel, SI of police .
Nisha has alleged that she was married to Sakthivel some years ago. 14 sovereigns of gold, 4 lakhs gifts were given. Still Ssakthivel troubled me asking for more money. At one time , I (Nisha) sold the lands belonging to my parents and gave 10 lakhs to Sakthivel. In spite of that he continued beating me and torturing me.
In the meanwhile I have come to know that he is trying to marry another girl in Krishnagiri district . When I went there are inquired, I realised that it is true. So Nisha has alleged that Sakthivel is trying to cheat her
The complaint was sent to Nilagiri Distric SP Mr. Senthilkumar. Based on an inquiry headed by Ms. Anitha , DSP, a case has been filed on Sakthivel
ஐ., மீது வழக்கு பதிவு மனைவியின் புகார் எதிரொலி
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 09,2013,02:39 IST
ஊட்டி:கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.ஐ., மீது, ஊட்டி போலீஸ் ஸ்டேஷனில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி எஸ்.பி., அலுவலக தொழில்நுட்பப் பிரிவில், எஸ்.ஐ.,யாக பணி புரிந்து வந்தவர் சக்திவேல், 30; தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, நீலகிரி மாவட்டம், மசினகுடி மாவனல்லா பகுதியைச் சேர்ந்த நிஷா, 26 என்பவர், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், எனக்கும், சக்திவேலுக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 14 சவரன் நகை, 4 லட்சம் ரொக்கம் வழங்கினோம். அவ்வப்போது பணம் கேட்டு சக்திவேல் என்னை தொந்தரவு செய்தார். ஒரு கட்டத்தில், என் பெற்றோருக்கு சொந்தமான நிலத்தை விற்று, 10 லட்சம் கொடுத்தேன். இருப்பினும், அவர் என்னை தொடர்ந்து சித்ரவதை செய்து, அடித்து துன்புறுத்தினார்.
இதற்கிடையில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதாக, எனக்கு தகவல் வந்தது. நேரில் சென்று விசாரித்த போது, அது உண்மை என தெரியவந்தது. அவர் என்னை ஏமாற்றும் நோக்குடன், இரண்டாவது திருமணம் செய்யும் முயற்சி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகார் மனு,நீலகிரி மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் விசாரணைக்காக, அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.டி.எஸ்.பி., அனிதா தலைமையில் நடந்த விசாரணையை தொடர்ந்து, நேற்றிரவு எஸ்.ஐ., சக்திவேல் மீது,"பெண்ணை மோசடி செய்தது' உட் பட பல்வேறு பிரிவுகளின் கீழ், ஊட்டி "ஜி1' போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.
*****************
FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/ FOR 100s of high court and supreme court cases
regards
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
No comments:
Post a Comment