Friday, September 6, 2013

loverboy kills sweet girl (29) &buries body. machines brought to excavate. body parts recovered !! Kanyakumarri, TN கன்னியாகுமரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு


Robin a fisherman resides are Anthoniyar street, Kanyakumari 
  
His wife Kalaiyarasi (29) used to be door to door saleswoman selling clothes and cosmetics
  
suddenly she left home one day and disappeared
  
Robin filed a police complaint 
  
Police teams were pressed into action to find out the missing young woman 
  
Police recovered cell phone data of Kalayarasi and investigated
  
One auto driver, one cell phone distributor and another fishing boat operator were detained
  
The boat owner Simporian (47) seems to have had illicit affair with Kalayarasi for more than three years
  
When the legal husband Robin came to know of this he has advised and warned Kalaiyarasi against such activities 
  
In the meanwhile Simporian's son had fallen ill and it was suspected that Robin had done some black magic against Simporian's son
  
Simporian had also got un interested / frustrated with Kalayarasi

So he called her to a secluded spot near Mahadanauram , four roads aream and killed her
  
He buried the body near Murugan Kunram area
  
Police vivsited the spot and a new residential nagar / plots had been re mamrked on that area
  
So police / Simporian could not exactly identify the place where the body was burried
  
Many excavating machines were pressed into action and the body parts of Kalayarasi were initially excavated. Later the entire body was found 
  
Simporian and others have been arrested 
  
Local town people also conducted a one day strike and did NOT go fishing, inisisting to know the full truth behind this case 
  
  
  
*****************************************************************************
  
  
  
  
கன்னியாகுமரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு
பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மார்ச் 16, 6:02 PM IST

கன்னியாகுமரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்று புதைக்கப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு
கன்னியாகுமரி, மார்ச்.16-
 
கன்னியாகுமரி அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் ராபின். மீன்பிடி தொழிலாளி.
 
இவரது மனைவி கலையரசி(வயது29). இவர் வீடு, வீடாக சென்று துணி மணி மற்றும் அழகு சாதன பொருட்களை விற்று வந்தார். கடந்த மாதம் 12-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
 
இதுகுறித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கலையரசியை தேடி வந்தனர். டி.எஸ்.பி. பால கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், அன்புபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
 
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தனிப்பிரிவு போலீசார் மூலமும் விசாரணையை துரிதப்படுத்தினார். தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், ஏட்டுகள் முருகன், மகேஷ் ஆகியோர் கலையரசியின் செல்போன் விவரங்களை சேகரித்து புது கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டனர். ஆட்டோ டிரைவர், செல்போன் கடை உரிமையாளர் உள்ளிட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
 
இதில் கன்னியாகுமரி சர்ச்சன்னதி தெருவை சேர்ந்த சிம்போரியன்(47) என்பவர் சிக்கினார். படகு உரிமையாளரான இவருக்கும், கலையரசிக்கும் இடையே 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
 
போலீசார் சிம்போரியனை மடக்கிப் பிடித்து விசாரித்த போது கலையரசியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இவர்களது கள்ளத் தொடர்பு விவகாரம் கலையரசியின் கணவருக்கு தெரியவந்த போது அவர் சிம்போரியனை கண்டித்துள்ளார்.
 
இந்தநிலையில் சிம்போரியனின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. ராபின் மாந்திரிகம் செய்ததால் மகனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கருதிய சிம்போரியன் அதற்கு பழி வாங்க நினைத்தார். அந்த நேரத்தில் கலையரசியின் நடவடிக்கைகளும் அவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் ராபினை பழிவாங்க கலையரசியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று கலையரசியை போன் செய்து மகாதானபுரம் நான்கு வழிச்சாலை பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்துள்ளார்.
 
பின்னர் உடலை முருகன் குன்றம் பகுதியில் புதைத்து விட்டதாக சிம்போரியன் கூறினார். எனவே கலையரசியின் உடலை தோண்டி எடுக்க நேற்று காலை முதல் போலீசார் முருகன்குன்றம் பகுதியில் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று 4 ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் தோண்டினர். உடல் புதைக்கப்பட்டு ஒரு மாதமாகி விட்டதால் அங்கு பிளாட் போடப்பட்டு இருந்தது. இதனால் சிம்போரியனால் உடல் புதைத்த இடத்தை சரியாக அடையாளம் காட்ட முடியவில்லை.
 
எனவே பிளாட் போடப்பட்ட 5 ஏக்கர் நிலத்தையும் போலீசார் விடிய, விடிய தோண்டினர். நேற்று மதியம் தொடங்கிய பணி இன்று அதிகாலை 4 மணி வரை நடந்தது. பின்னர் இன்று 2-வது நாளாக காலை 8 மணிக்கு மீண்டும் நிலத்தை தோண்டும் பணி நடந்தது.
 
பகல் 12.30 மணி அளவில் பொக்லைன் எந்திரம் ஒரு இடத்தில் மண்ணை தோண்டி வெளியே வீசியபோது, அதில், ஒரு பெண்ணின் உடல் பாகங்களும் வெளியே வந்து விழுந்தன.
 
இதனை அங்கு நின்ற போலீசார் பார்த்ததும் அந்த இடத்தை மீண்டும் ஆழமாக தோண்டினர். அப்போது அங்கு புதைக்கப்பட்ட கலையரசியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டது. உடல் பாகங்கள் அழுகி துர்நாற்றம் வீசியதால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தோண்டி எடுக்கப்பட்ட பிணத்தை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
 
இனி பரிசோதனை முடிவுகள் வந்த பின்பே கலையரசி எப்படி கொல்லப்பட்டார்? என்ற விவரங்கள் தெரியவரும். அப்போது அவர், ஒருவரால் கொல்லப்பட்டாரா? அல்லது பலர் சேர்ந்து கொலையை செய்தார்களா? என்பதும் தெரிய வரும்.
 
அதன் பின்பே போலீஸ் விசாரணை சூடு பிடிக்கும் என்று தெரிகிறது. இந்த கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிப்பதால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பு இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
 
இதற்கிடையே கலையரசி கொலை தொடர்பான விவரங்களை ஊர்மக்களுக்கு தெரிவிக்கக்கோரியும், இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
கன்னியாகுமரியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.








*****************

FOLLOW http://twitter.com/ATMwithDick on twitter or http://vinayak.wordpress.com/ on wordpress or http://evinayak.tumblr.com/  FOR 100s of high court and supreme court cases
  
  
regards
  
Vinayak
Father of a lovely daughter, criminal in the eyes of a wife, son of an compassionate elderly mother, old timer who hasn't given up, Male, activist
  
  

No comments:

Post a Comment