வேறு பெண்ணை மணந்ததால் காதலன் வீட்டு முன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
கருத்துகள்
02:20:16
Tuesday
2013-09-03
நெல்லை: நெல்லை அருகே காதலன் வேறொரு பெண்ணை மணந்ததால் விரக்தியடைந்த இளம்பெண் காதலன் வீட்டு முன் தீக்குளித்து தற்கொலை செய்தார்.
பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் கீழுரை சேர்ந்த கன்னையா மகள் சுமதி என்ற ஆறுமுகத்தம்மாள் (23). விவாகரத்து பெற்றவர். பெற்றோருடன் சுமதி வசித்து வந்தார்.
இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த வெங்கட்ராமன் (55) என்பவரின் மகன் முத்துவும் (28), சுமதியும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவ்வப்போது, இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு முத்துவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க துவங்கினர். இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக சுமதியுடன் பேசுவதை முத்து தவிர்த்து வந்தார்.
இதனால் சுமதி மனமுடைந்தார். பெற்றோர் பாளை தாலுகா மற்றும் பாளை மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் முத்து மீது புகார் செய்தும், வழக்கு பதியவில்லை.இதற்கிடையே, முத்துவுக்கும், ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பிலுள்ள முருகன் கோயிலில் நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், ராஜவல்லிபுரத்திலுள்ள மணமகள் வீட்டில் வைத்து போலீசாருக்கு தெரியாமல் திருமணத்தை நடத்தினர்.
இதனையறிந்த சுமதி நேற்று முன்தினம் முழுவதும் வீட்டில் அழுது கொண்டே இருந்தார். நேற்று அதிகாலையில் சுமதி திடீரென முத்துவின் வீட்டு முன் சென்று, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் கருகி அங்கேயே இறந்தார்.இதனால், சுமதியின் உறவினர்கள் ஆத்திரமடைந்து முத்து மற்றும் அவரது அண்ணன் வீடுகளுக்கு சென்றனர். அங்கு யாரும் இல்லாததால் வீடுகளுக்கு முன்பு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். 2 கார்கள், 3 பைக்குகளுக்கு தீ வைத்தனர். இது தொடர்பாக ஆர்டிஓ பெருமாள் விசாரணை நடத்தினார். பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=61171
No comments:
Post a Comment